அன்றாடத் தொற்று அதிகரிப்பு

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் நேற்­றுப் புதி­தாக 1,72,433 பேருக்­கு கொரோனா தொற்று உறு­தி­யா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. நேற்று முன் தினத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் அது 7% அதி­கம்.

இதற்­கி­டை­யில் கிரு­மித் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்து வீடு திரும்­பி­யோர் எண்­ணிக்கை 3,97,70,414 ஆகப் பதி­வா­னது.

நேற்று மட்­டும் 1,008 பேர் கொவிட்-19 தொற்­றால் உயி­ரி­ழந்­த­தாக மத்­திய சுகா­தார அமைச்சு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் 15 வயது முதல் 18 வயது பூர்த்­தி­யா­னோ­ருக்கு இரண்­டா­வது தவணை தடுப்­பூசி செலுத்­து­வதை விரை­வு­ப­டுத்­தும்­படி மாநில மற்­றும் யூனி­யன் பிர­தேச அர­சாங்­கங்­களை அது கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

மத்­திய சுகா­தா­ரத்­து­றைச் செய­லா­ளர் ராஜேஷ் பூஷண், மாநில, யூனி­யன் பிர­தேச அர­சாங்­கங்­க­ளுக்கு அது­கு­றித்­துக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் சிறார்­க­ளுக்­குக் கோவாக்­சின் தடுப்­பூசி மட்­டும் செலுத்­தப்­பட்டு வரு­வ­தால் 28 நாள்­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு இரண்­டாம் தவணை தடுப்­பூசி செலுத்த வேண்­டும்.

15 முதல் 18 வய­தா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடும் பணி ஜன­வரி 3ஆம் தேதி தொடங்­கி­யது.

இது­வரை 4.66 கோடி பேருக்­குத் தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூசி செலுத்­துவ­தால் கிரு­மிப் பர­வல் குறைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!