மனம் விட்டுப் பேசிய பாஜக - காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

புது­டெல்லி: "எனது தந்­தை­யும் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்; எனவே, அந்த வலியை நான் உணர்­வேன்," என காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்­தி­யி­டம் உருக்­க­மா­கப் பேசி­யுள்­ளார் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கம­லேஷ்.

நாடா­ளு­மன்­றத்­தில் குடி­ய­ர­சுத் தலை­வர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீதான விவா­தத்­தில் பங்­கேற்று காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி­னார்.

அப்­போது அவர் "எனது பாட்டி இந்­திரா காந்தி மீது மீது 32 குண்­டு­கள் பாய்ந்­தன.

எனது தந்தை வெடி­குண்­டுத் தாக்­கு­த­லில் துண்டு துண்­டா­கச் சித­றி­னார். ஆனால், இன்று பா.ஜ.க.வின் கொள்­கை­கள் பாகிஸ்­தா­னை­யும் சீனா­வை­யும் ஒன்­றி­ணைத்­துள்­ளது. இது ஆபத்­தா­னது. இது நாட்­டுக்­குப் பெரிய அச்­சு­றுத்­த­ல­தாக உரு­வெ­டுக்­கக்­கூ­டும். இது­கு­றித்து யார் குரல் கொடுத்­தா­லும் நீங்­கள் செவி­சாய்க்க மறுக்­கி­றீர்­கள்.

எனக்கு முன்­னால் பேசிய பார­திய ஜனதா கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கம­லேஷ் பஸ்­வான் தவ­றான கட்­சி­யில் இருக்­கி­றார். அவர் என்­னி­டம் தனிப்­பட்ட முறை­யில் பேசி­யி­ருக்­கி­றார்," என்­றார்.

அப்­போது அவை­யில் சல­ச­லப்பு எழ, கம­லேஷ் பஸ்­வான் பேச அனு­மதி கோரி­னார். ராகுல் காந்தி அதற்கு "நான் ஜன­நா­ய­க­வாதி. கம­லேஷ் பேசு­வ­தற்கு அனு­ம­திப்­பேன்," என்­றார்.

தொடர்ந்து பேசிய கம­லேஷ் பஸ்­வான் "நான் சரி­யான இடத்­தில்­தான் இருக்­கி­றேன். எனது கட்சி என்னை இங்கு நிற்­க­வைத்­துள்­ளது. இதை­விட என்ன வேண்­டும்.

"என் தந்­தை­யும் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார். அத­னால் என்­னா­லும் அந்த வேத­னையை உண­ர­மு­டி­யும்," என்று கூறி அமர்ந்­தார்.

கம­லேஷ் பஸ்­வா­னின் தந்தை ஓம் பிர­காஷ் பஸ்­வான் உத்­த­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த அர­சி­யல் தலை­வர்.

1996ல் பொதுக்­கூட்­டத்­தில் அவர் உரை­யா­டிக் கொண்­டி­ருந்­த­போது சுட்டு வீழ்த்­தப்­பட்­டார்.

நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் எதி­ரெ­திர் கட்­சிக்­கா­ரர்­கள் உருக்­க­மா­கப் பேசிக்­கொண்ட நிகழ்வு பல­ரை­யும் நெகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!