திரையரங்கு, நீச்சல் குளம்: 100% அனுமதி

கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்­களூரு: கர்­நா­ட­கா­வில் கொரோனா தொற்­றுப் பர­வல் குறைந்து வரு­வ­தை­ய­டுத்து அங்கு திரை­ய­ரங்­கு­களில் நூறு விழுக்­காடு இருக்­கை­களைப் பயன்­ப­டுத்­த­லாம் என அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

அங்கு மேலும் சில ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­களை தளர்த்தி உள்ளது அம்­மாநில அரசு.

கர்­நா­ட­கா­வில் கிரு­மித்­தொற்று பாதிப்­புக்­காக சிகிச்சை பெற மருத்­து­வ­ம­னை­களில் அனு­மதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை இரண்டு விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் ஐந்து விழுக்­காட்­டி­னர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­களை தளர்த்­து­வது குறித்து முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை நேற்று முன்­தி­னம் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள், நிபு­ணர்­க­ளு­டன் தீவிர ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார்.

அப்­போது எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விவ­ரம் தெரி­வித்த அம்­மா­நில சுகாதா­ரத்­துறை அமைச்­சர் சுதா­கர், திரை­ய­ரங்­கு­கள் மட்­டு­மல்­லா­மல், யோகா மையங்­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­க­ளி­லும் அவற்­றின் பயன்­பாட்டு அள­வுக்கு ஏற்ப ஆட்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­லாம் என்­றார்.

பொது­மக்­கள் அனைத்து கொரோனா வழி­காட்டி நெறி­முறை­க­ளை­யும் பின்­பற்ற வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கேரள நில­வ­ரம்

இதற்­கி­டையே, கேர­ளா­வில் தொற்­று பாதிப்பு தொடர்ந்து ஏறுமு­க­மா­கவே இருந்து வரு­கிறது.

அங்கு நேற்று முன்­தி­னம் புதி­தாக மேலும் 38,684 பேருக்கு கிருமி தொற்­றி­யது. மேலும் 28 பேர் மாண்டு­விட்­ட­னர்.

எனி­னும், நேற்று முன்­தி­னம் 41,037 பேர் தொற்­றில் இருந்து குணம் அடைந்­துள்­ள­னர் என்­பது அம்­மா­நில மக்­க­ளுக்கு ஆறு­தல் தரும் தக­வ­லாக அமைந்­துள்­ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 127,952 பேருக்கு கிருமி தொற்றியதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மேலும் 1,059 பேர் பலியாகிவிட்டனர்.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!