ஐந்து மாநிலத் தேர்தல்: கட்டுப்பாடுகள் தளர்வு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புது­டெல்லி: ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­க­ளை­யொட்டி பிர­சா­ரப் பொதுக்­கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டு­ப்பா­டு­களில் சில­வற்றை தேர்­தல் ஆணை­யம் தளர்த்தி உள்­ளது.

எனி­னும், பேர­ணி­கள், வாக­னப் பிர­சா­ரங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை விலக்­கப்­ப­ட­வில்லை.

உத்­த­ரப் பிர­தே­சம், பஞ்­சாப், மணிப்­பூர், கோவா, உத்­த­ர­காண்ட் ஆகிய ஐந்து மாநி­லங்­களில் இம்­மா­தம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை பல்­வேறு கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதை­ய­டுத்து தேர்­தல் நடத்தை விதி­மு­றை­கள் அம­லுக்கு வந்­துள்­ளன.

மேலும், தேர்­தல் பிர­சா­ரம் தொடர்­பாக தேர்­தல் ஆணை­யம் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளை­யும் அறி­வித்­தது. இது தொடர்­பாக அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் 16 அம்­சங்­கள் கொண்ட வழி­காட்டி நெறி­மு­றை­கள் அறி­விக்­கப்­பட்­டன.

வீடு வீடா­கச் சென்று பிர­சா­ரம் மேற்­கொள்­ளும்­போது வேட்­பா­ள­ரு­டன் ஐந்து பேர் மட்­டுமே செல்ல முடி­யும், பேர­ணி­கள், வாக­னப் பிர­சா­ரங்­க­ளுக்­குத் தடை, வெற்­றிக் கொண்­டாட்­டங்­க­ளுக்­குத் தடை என தேர்­தல் ஆணை­யம் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை அறி­வித்தது.

இந்­நி­லை­யில், மத்­திய சுகா­தார அமைச்­சு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னர், உள் அரங்­கு­கள், பொது­வெ­ளி­யில் நடத்­தப்­படும் அர­சி­யல் கூட்­டங்­கள் தொடர்­பாக சில தளர்வு­கள் அறி­விக்­கப்­ப­டு­வ­தாக தேர்­தல் ஆணை­யம் கூறி­யுள்­ளது.

"உள் அரங்கு என்­றால் அதன் கொள்­ள­ள­வில் 50%, பொது­வெளி என்­றால் அதன் கொள்­ள­ள­வில் 30% பேர் கூட்­டங்­களில் பங்­கேற்­க­லாம்," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!