தங்கக் கடத்தல் வழக்கு: கேரள முதல்வரைக் காப்பாற்ற முயற்சி

திரு­வ­னந்­தபுரம்: கேரள அர­சியல் களத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்ள தங்கக் கடத்­தல் வழக்­கில் இருந்து அம்­மா­நில முதல்வர் பின­ராயி விஜ­ய­னைக் காப்­பாற்ற முயற்சி நடப்­ப­தாக எதிர்க்­கட்­சித் தலை­வர் வி.டி.சதீசன் தெரி­வித்­துள்­ளார்.

வெளி­நாட்­டில் இருந்து கேர­ளா­வுக்கு தங்­கம் கடத்தி வரப்­பட்­ட­தாக எழுந்த குற்­றச்­சாட்­டின் பேரில் அம்­மா­நில அரசு நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய ஸ்வப்னா சுரேஷ் கைதா­னார்.

ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி அவர் இந்த முறை­கேட்­டில் ஈடு­பட்­டது காவல்துறை விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இந்த முறை­கேட்­டில் கேரள முதல்­வ­ரின் முன்­னாள் முதன்மைச் செய­லா­ளர் சிவ­சங்­க­ருக்குத் தொடர்பு இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டதை அடுத்து அவ­ரும் கைதா­னார்.

பின்­னர் பிணை­யில் வெளி­வந்த அவர், தமது சுய­ச­ரி­தைப் புத்­த­கத்­தில், ஸ்வப்னா தமக்குத் துரோ­கம் இழைத்­து­விட்­டார் எனக் குறிப்­பிட்­டுள்­ள­தாக செய்தி வெளி­யா­னது.

ஆனால், சிவ­சங்­கர்­தான் தம்மை தேசிய புல­னாய்வு முக­மை­யி­டம் சிக்க வைத்து துரோ­கம் இழைத்­த­தாக ஸ்வப்னா சுரேஷ் தெரி­வித்­துள்­ளார்.

"சிவ­சங்­க­ருக்கு பரி­சா­க­வும் பண­மா­க­வும் ஏரா­ள­மான உத­வி­கள் செய்­துள்­ளேன்.

"ஒரு கட்­டத்­தில் பணி­யில் இருந்து விருப்ப ஓய்வு எடுத்து துபா­யில் இரு­வ­ரும் தனி­யாக வாழ்க்கை நடத்­த­லாம் என சிவ­சங்­கர் என்னி­டம் கூறி­னார். தூத­ர­கம் மூலம் பல முறை­கே­டான செயல் நடப்­பது சிவ­சங்­க­ருக்குத் தெரி­யும்," என்று ஸ்வப்னா கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், தங்­கக் கடத்­தல் விவ­கா­ரம் தொடர்­பாக ஸ்வப்னா சுரேஷ் வெளி­யிட்­டுள்ள தகவல்கள் கேரள மக்­கள் மத்­தி­யில் அதிர்ச்சியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக அம்­மா­நில எதிர்க்­கட்­சித் தலை­வர் சதீ­சன் சாடி உள்­ளார்.

முதல்­வ­ர் பினராயி விஜயனின் தலைமை அலு­வ­ல­கத்­தில் சமூக விரோத செயல்­கள், தேசத் துரோக குற்­றங்­கள், பொருளா­தார குற்­றங்­கள் இவை ­யா­வும் மிக கச்­சி­த­மாக நடந்து இருப்பது தெள்­ளத்­தெ­ளி­வாகத் தெரிய வந்துள்ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!