‘ராமானுஜர் தமிழுக்காற்றிய பங்களிப்பு முக்கியமானது’

ஹைத­ரா­பாத்: ராமானுஜர் ஆற்றிய பணிகளில் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர் என்றும் அவரது துணிவு, கருத்துகள், சித்தாந்தங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தில் அவருக்கு 216 அடி உயரச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதைப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு ராமானுஜரின் சிலை எடுத்துக்கூறும் என்றார்.

ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட அவர், உலகில் மிகப் பழமையான நாகரிகம் கொண்ட இந்தியாவில் எந்தெந்த விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்கள்தான் சொல்லிக்கொடுத்தனர் என்றார்.

"ராமானுஜர் மிகவும் உன்னதமான அறிவோடு விளங்கியவர். பல விஷயங்களை தமது ஒரே நூலில் எளிமையாக தெரிவித்து உள்ளார்.

"தமிழில் பல முக்கியமான படைப்புகளை ராமானுஜர் கொடுத்துள்ளார். தமிழுக்கு அவர் ஆற்றிய சேவை முக்கியமானது," என்றார் பிரதமர் மோடி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!