வெளிநாடுகளிலும் கிளை பரப்புகிறது கேரள இளையரின் ‘சாய்வாலா’ தள்ளுவண்டிக் கடை

திருவனந்தபுரம்: ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் பணியாற்றிய கேரள இளையர் ஃபைசல் யூசுப் கடந்த 2018ஆம் ஆண்டு ஆலப்புழாவில் தள்ளுவண்டியில் தொடங்கிய 'தி சாய் வாலா' என்ற தேநீர்க் கடை வெளிநாடுகளிலும் கிளை பரப்ப உள்ளது.

பள்ளிப்படிப்பைக் கூட முடித்திராத ஃபைசல், மும்பையில் சில காலம் வேலை பார்த்துள்ளார். பின்னர் துபாய் சென்று பணியாற்றிய அவர், அங்கிருந்து இங்கிலாந்து சென்று அங்கு ஒரு காஃபி இறக்குமதி நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் வேலை பார்த்தார்.

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய ஃபைசல், ஏதாவது வித்தியாசமாக சாதிக்க நினைத்தபோது தள்ளுவண்டி தேநீர்க் கடை யோசனை மனதில் தோன்றியது.

ஒற்றை தள்­ளு­வண்­டி­யில் 50 வகை­யான தேயி­லை­க­ளைக் கொண்டு தேநீர் தயா­ரித்து விற்­றார் ஃபைசல். அரு­மை­யான சுவை இருந்­த­தால் கூட்­டம் அலை­மோ­தி­யது. இதை­யடுத்து கேரளா, தமிழ்­நாடு, கர்­நா­டகா என மூன்று மாநி­லங்­களில் ஐம்­பதுக்­கும் மேற்­பட்ட கிளை­களைத் தொடங்­கி­யுள்ளார் ஃபைசல். இப்­போது துபா­யி­லும் இவ­ரது தள்­ளு­வண்டி தேநீர்க் கடை­யின் கிளை திறக்­கப்­பட உள்­ளது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இந்­தியா முழு­வ­தும் ஆயி­ரம் கிளை­களைத் தொடங்­கு­வ­து­டன், ஓமன், கத்தார், பஹ்­ரைன் உள்­ளிட்ட நாடு­க­ளி­லும் 'தி சாய் வாலா'வைப் பார்க்க முடி­யும் என்­கி­றார் ஃபைசல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!