ரூ.40 கோடியில் ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் மையம்

பெங்­களூரு: ஆசி­யா­வின் மிகப்­பெரிய அனி­மே­ஷன் மையம் பெங்­களூ­ரு­வில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் நாற்­பது கோடி ரூபாய் செல­வில் கர்­நா­டகா அரசு இதை உரு­வாக்கி உள்­ளது என்­றும் இதன் மூலம் இளை­யர்­கள் பெரு­ம­ளவு பயன் அடை­வர் என்­றும் அம்­மாநி­லத்­தின் தக­வல் தொழில்­நுட்ப, உயிரி தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் அஸ்­வத் நாரா­யண் தெரி­வித்­துள்­ளார்.

இம்­மை­யத்­தில், விஷூ­வல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (ஏவி­ஜிசி) உள்­ளிட்ட பல்­வேறு நவீன தொழில்­நுட்ப அம்­சங்­க­ளுக்­கான பயிற்சி அளிக்­கப்­படும் என்று இம்­மை­யத்­தின் திறப்பு விழா­வில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

உலக அள­வில் அனி­மே­ஷன் துறை சார்ந்த சந்­தை­யில் சுமார் பத்து விழு­காடு இடத்தை இந்­தியா தன்­வ­சம் வைத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், எதிர்­வ­ரும் 2027ஆம் ஆண்­டில் இதை 25 விழுக்­கா­டாக அதி­க­ரிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

இந்­திய அள­வில் இத்­து­றை­யில் கர்­நா­ட­கா­வின் பங்­க­ளிப்பு அதி­கம் என்­றும், இத்­துறை சார்ந்த ஆற்­றல் அம்­மா­நி­லத்­தில் அதி­க­மாக உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

"தற்­போது திறக்­கப்­பட்­டுள்ள இந்­தச் சிறப்பு அனி­மே­ஷன் மையமானது மின்­னி­லக்க வடி­வில் ஆக்­க­பூர்­வ­மான தொழில்­களைத் தொடங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தும். மெய்­நி­கர், நிகழ்­நேர மெய்­நி­கர் உற்­பத்தி, இதர தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான நவீன தொழில்­நுட்ப அம்­சங்­கள் தொடர்­பில் தனித்­து­வ­மான படிப்­பு­களை வழங்­கும் பள்­ளி­யும் இம்­மை­யத்­தில் இடம்­பெற்­றுள்ளது," என்­றார் அமைச்­சர் அஸ்­வத் நாரா­யண்.

அடுத்த ஓராண்­டுக்­குள் அனி­மே­ஷன் துறை சார்ந்த கொள்­கை­களை அரசு வகுக்கும் என்றும் மின்­னி­லக்க ஊடக பொழு­து­போக்கு மையம் அமைக்க திட்­ட­மிடப்­பட்டுள்­ள­தா­க­வும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!