கர்நாடகாவில் பதற்றம்

பெங்­க­ளூரு: கல்­லூ­ரிக்கு ஹிஜாப், காவித் துண்டு அணிந்து வரும் விவ­கா­ரம் கர்­நா­ட­கத்­தில் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இது தொடர்­பான வழக்கு கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்­தில் நேற்று விசா­ரிக்­கப்­பட இருந்த நிலை­யில் கட­லோர மாவட்­ட­மான உடுப்­பி

­யிலுள்ள சில கல்­லூ­ரி­களில் மாண­வர்­கள் போராட்­டம் நடத்­தி­னர்.

வட­கர்­நா­டக மாவட்­ட­மான பாகல்­கோட்­டை­யில் உள்ள பெரப்­ப­ர­ன­பட்­டி­யில் உள்ள அரசு கல்­லூ­ரி­யில் நடந்த போராட்­டத்­தின் போது கல்­வீச்சு நடந்­தது. இதில் ஒரு மாண­வர் காயம் அடைந்­தார். இது­போல மலை­நாடு மாவட்­ட­மான சிவ­மொக்­கா­வில் நடந்த போராட்­டத்­தி­லும் கல்­வீச்­சில் ஒரு மாண­வ­ரின் மண்டை உடைந்­தது. இச்­சம்ப வம் அங்கு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கர்­நா­டக மாநி­லத்­தின் உடுப்பி அரசு மக­ளிர் பி.யூ. கல்­லூ­ரி­யில் கடந்த டிசம்­பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு முஸ்­லிம் மாண­வி­க­ளுக்கு வகுப்­ப­றை­யில் நுழைய அனு­மதி மறுக்­கப்­பட்­டது. இதை அடுத்து அந்த மாண­வி­கள் ஹிஜாப் அணிந்து தர்­ணா­வில் ஈடு­பட்­ட­னர்.

அந்த மாண­வி­க­ளுக்கு எதி­ராக காவி­நி­றத் துண்டை தோளில் போட்­டுக்­கொண்டு சில மாண­வர் கள் வந்­த­னர். இந்த சர்ச்சை நாடெங்­கி­லும் பெரும் கவ­னத்தை ஈர்த்­தது. "ஹிஜாப் அணிந்த மாண­வி­கள் பள்­ளிக்­குள் நுழை­வ­தைத் தடை செய்­வது அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தா­கும்," என்று முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மையா கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!