மலைப்பாறை இடுக்கில் சிக்கிய இளையரை மீட்டது ராணுவம்

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் மலை­யேற்­றப் பயிற்­சி­யின்­போது, மலைச்­சரி­வில் சிக்­கிய 23 வயது இளை­ய­ரான ஆர்.பாபு என்­ப­வரை இரு தினங்­க­ளுக்­குப் பிறகு ராணுவ வீரர்­கள் பத்­தி­ர­மாக மீட்­ட­னர்.

தனது நண்­பர்­கள் இரு­வ­ரு­டன் கடந்த திங்­கட்­கி­ழமை மலப்­பு­ரம் அருகே உள்ள செராட் மலை­யில் மலை­யேற்­றப் பயிற்­சி­யில் ஈடு­பட்டி­ருந்­தார்.

மூவ­ரும் மலை­யே­றிய நிலை­யில், நண்­பர்­கள் இரு­வ­ரும் பின்­தங்­கி­விட்­ட­னர். மிக வேக­மாக மலை உச்­சியை நோக்­கிச் சென்ற பாபு,­திடீ­ரென கால் இட­றி கீழே விழுந்தபோது பாறை­க­ளுக்கு மத்தி­யில் இருந்த ஓர் இடுக்­கில் சிக்­கிக் கொண்­டார்.

நீண்ட நேரத்­துக்­குப் பின்­னர் அவ­ரது நண்­பர்­கள் இரு­வ­ரும் உச்­சியை அடைந்­த­போது தான் பாபு மலைப்பாறை இடுக்­கில் சிக்­கி­ இருப்­பது தெரி­ய­வந்­தது.

இதுகுறித்து மாவட்ட நிர்­வா­கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்த னர். திங்­கட்­கி­ழமை மாலை மீட்­புப் பணி தொடங்­கி­யது. பின்­னர் பாபுவை மீட்க ராணு­வத்­தின் உதவி­யும் கோரப்­பட்­டது.

ஹெலி­காப்­டர் மூலம் மீட்­ப­தில் சில சிக்­கல்­கள் இருந்­த­தால் அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­ட­டது.

இதற்­கி­டையே, பல மணி நேரம் உண­வும் குடி­நீ­ரும் இன்றி காலில் காயத்­து­டன், உயி­ரைக் கையில் பிடித்­த­படி காத்­தி­ருந்த பாபு­வுக்கு உண­வும் குடி­நீ­ரும் கொடுக்­கப்­பட்­டது. அதன் பின்­னர் கன­மான கயிறு கொண்டு ராணுவ வீரர்­கள் பாபுவை மலை உச்­சிக்­குத் தூக்­கி­னர். உச்­சி­யில் இருந்து இரு­நூறு அடி கீழே இருந்த பாறை இடுக்­கில்­தான் அவர் சிக்­கி­யி­ருந்­தார்.

பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்ட பாபு ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!