அமைச்சர்: பாஜக ஆட்சியில் அனைத்திலும் முன்னேற்றம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் முந்­திய காங்­கி­ரஸ் ஆட்­சி­யை­விட இப்­போதைய பாஜக ஆட்­சிக் காலத்தில் அனைத்­தி­லும் நாடு முன்­னேறி இருக்­கிறது என்று நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் நேற்று மாநிலங்­க­ள­வை­யில் பெரு­மை­பட கூறி­னார்.

பண­வீக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வது, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, ஏற்­று­மதி, அந்­நிய நேரடி முத­லீடு உள்­ளிட்ட அனைத்­தி­லும் பாஜக ஆட்­சி­யில் பெரும் சாத­னை­கள் படைக்­கப்­பட்டு இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

மாநி­லங்­க­ள­வை­யில் வர­வு­செ­ல­வுத் திட்ட உரைக்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய நிதி அமைச்­சர், அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்­கான தொலை­நோக்­குப் பார்­வை­ இல்­லா­விட்­டால் காங்­கி­ரஸ் கட்­சி­யைப் போல 65 ஆண்­டு­களில் வீழ்ந்­து­வி­டக்­கூ­டிய சூழ்­நிலை ஏற்­படும் என்று குறிப்­பிட்­டார்.

மத்­திய வர­வு­செ­ல­வுத் திட்­டம் 'இந்­தியா 100' என்ற இலக்கை நோக்கி அடுத்த 25 ஆண்­டு­கால வளர்ச்­சியை மைய­மா­கக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்டு இருக்­கிறது என்­றார் அவர்.

இந்தியா சுதந்­தி­ரம் அடைந்து அடுத்த 25 ஆண்­டு­க­ளில் 100 ஆண்­டு­கள் ஆகும் என்ற கணக்­கில் இந்­தியா 100 திட்­டம் வகுக்­கப்­பட்­ட­தா­க­வும் நிதி அமைச்சர் தெரி­வித்­தார்.

காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் 9.1% ஆக இருந்த பண­வீக்­கம் பாஜக ஆட்­சி­யில் 6.2%ஆகக் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது.

எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் அளவு ரூ.1.1 லட்­சம் கோடி­யாக இருந்­தது. அது இப்­போது ரூ.2.32 லட்­சம் கோடி­யாக அதி­க­ரித்து இருக்­கிறது.

2013-14ஆம் ஆண்­டில் ரூ.2.85 லட்­சம் கோடி­யாக இருந்த ஏற்­று­மதி இப்­போது ரூ.4.7 லட்­சம் கோடி­யாக அதி­க­ரித்து இருக்­கிறது.

275 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக இருந்த அந்­நி­யச் செலா­வணி, இப்­போது 630 பில்­லி­யன் டால­ராக உள்­ளது. 36 பில்­லி­யன் டால­ராக இருந்த அந்­நிய நேரடி முத­லீடு இப்­போது 80 பில்­லி­யன் டால­ராக அதி­க­ரித்­துள்­ளது என்று நிதி அமைச்­சர் தெரி­வித்­தார்.

வேலை வாய்ப்­பு­கள் பற்றி குறிப்­பிட்ட அமைச்­சர், நாட்­டில் 60 லட்­சம் பேருக்கு வேலை­களை உரு­வாக்க வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் ஏற்­பா­டு­கள் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார். அமைச்­சர் நிர்­ம­லா­வின் விளக்­கத்தை அடுத்து மாநி­லங்­களவை மார்ச் 14ஆம் தேதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!