அன்பர் தினம்: கல்லீரல் தானம்

அன்பர் தினம்: கல்லீரல் தானம்

1 mins read
3fc43ef8-4f81-40d5-b1de-c73812fe4d9c
சுபீஷ், பிரவிஜா தம்பதியர். படம்: தகவல் ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வைச் சேர்ந்த சுபீ­ஷுக்கு சில ஆண்­டு­களுக்கு முன் கல்­லீ­ரல் பாதிப்பு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து மாற்று கல்­லீ­ரல் பொருத்­தி­னால் மட்­டுமே அவர் உயிர் பிழைக்க முடி­யும் என மருத்­து­வர்­கள் கூறி­விட்­ட­னர்.

அரசு மருத்­து­வ­ம­னை­யில் இல­ வ­ச­மாக அறுவை சிகிச்சை செய்­வார்­கள் என்­றா­லும் கல்­லீ­ரலை யாரி­டம் இருந்து தான­மா­கப் பெறு­வது என்று சுபீஷும் அவரது மனைவி பிரவிஜாவும் மனம் கலங்கி நின்­ற­னர். அப்­போது காதல் கண­வருக்­குத் தாமே கல்­லீ­ரல் தானம் வழங்க முன்­வந்­தார் பிர­விஜா. இதை­ய­டுத்து நடத்­தப்­பட்ட பரி­சோதனை­க­ளின் முடி­வில் அவ­ரது கல்­லீ­ரல் சுபீ­ஷக்­குப் பொருந்தும் என்­பது உறு­தி­யா­னது.

இந்­நி­லை­யில், அன்­பர் தினத்­தன்று சுபீ­ஷுக்கு கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. சுமார் 18 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்­சை­யின்­போது பிர­வி­ஜா­வின் இட­து­பக்க கல்­லீ­ர­லில் இருந்து ஒரு பகுதி எடுக்­கப்­பட்டு, சுபீ­ஷுக்­குப் பொருத்­தப்­பட்­டது.