ஐபிஎஸ் அதிகாரி கைது

லஷ்கர் பயங்கரவாத அமைப்பிற்குத் தகவல்களைக் கசியவிட்டார்

புது­டெல்லி: பாகிஸ்­தா­னைத் தள­மா­கக் கொண்ட லஷ்­கர்-இ-தொய்பா பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் ரக­சிய ஆவ­ணத்­தைப் பகிர்ந்­து­கொண்­ட­தா­கக் கூறி, இந்­திய தேசிய புல­னாய்வு அமைப்­பின் (என்­ஐஏ) முன்­னாள் உய­ர­தி­காரி ஒரு­வரை அவ்­வ­மைப்பு கைது­செய்­துள்­ளது.

இதே வழக்­கில்­தான் கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்­மீர் மனித உரிமை ஆர்­வ­ல­ரான குர்­ரம் பர்­வேஸ் கைது செய்­யப்­பட்­டார். பர்­வேஸ் மூல­மாக அந்த ரக­சிய ஆவ­ணம் லஷ்­கர் அமைப்­பிற்­குச் சென்­ற­தாக என்­ஐ­ஏ­விற்­குத் தக­வல் கிடைத்­தது.

ஐபி­எஸ் அதி­கா­ரி­யான அர­விந்த் திக்­வி­ஜய் நேகி, என்­ஐஏ அமைப்பு தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து அதில் பணி­யாற்றி வந்­தார். பின்­னர் சென்ற ஆண்­டில் தமது சொந்த மாநி­ல­மான இமாச்­ச­லப் பிர­தேத்­திற்­குத் திரும்பி, சிம்லா நக­ரின் காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ள­ராகப் பணி­யாற்றி வந்­தார்.

அத­னைத் தொடர்ந்து, குர்­ரம் பர்­வேஸ் வழக்­குத் தொடர்­பில் கடந்த நவம்­பர் மாதம் சிம்­லா­வில் உள்ள நேகி­யின் வீட்­டில் என்­ஐஏ அதி­ர­டிச் சோதனை நடத்­தி­யது.

ஜம்மு-காஷ்­மீ­ரில் ஹுரி­யத் தலை­வர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு, இந்­துத்­துவ பயங்­க­ர­வாத வழக்­கு­கள் உள்ள பல வழக்­கு­க­ளின் விசா­ர­ணைக் குழு­வில் நேகி இடம்­பெ­றி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளைத் திட்­ட­மி­டு­வ­தற்­கும் அவற்­றைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கும் ஆத­ரவு வழங்­கி­ய­தா­கக் கூறி, என்­ஐஏ நேற்று முன்தினம் நேகி­யைக் கைது­செய்­தது.

இவ்­வ­ழக்­கு தொடர்­பில் இதற்கு­முன் ஆறு பேரை என்­ஐஏ கைது­செய்­துள்­ளது.

சென்ற ஆண்டு நவம்­பர் 22ஆம் தேதி பர்­வேஸ் கைது­செய்­யப்­பட்­டார். அதற்கு மறு­நாள் நேகி­யின் வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டது.

பர்­வேஸ் கைதான சம­யத்­தில், அவர் தடை செய்­யப்­பட்ட பாகிஸ்­தான் பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­பில் இருந்­த­தாக என்­ஐஏ குறிப்­பிட்­டது.

அவ­ரி­டம் விசா­ரித்­த­போது நேகிக்­கும் பங்­கி­ருக்­க­லாம் என்று என்­ஐஏ சந்­தே­கப்­பட்­டது. விசா­ரணை தொடர்­பான ரக­சிய ஆவ­ணம் ஒன்றை பர்­வே­சி­டம் நேகி காட்­டி­ய­தாக என்­ஐஏ அதி­காரி தெரி­வித்­தார். விசா­ர­ணை­யின்­போது தனக்கு எது­வும் தெரி­யாது, தான் குற்­ற­மற்­ற­வன் என்று நேகி சொன்­ன­தா­கக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!