பிரகாஷ் ராஜை மாநிலங்களவை உறுப்பினராக்க டிஆர்எஸ் கட்சி ஆலோசனை

ஹைத­ரா­பாத்: தெலுங்­கானா சார்­பில், மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக நடி­கர் பிர­காஷ்­ ராஜ் (படம்) நிய­ம­னம் செய்­வ­தற்­குப் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­தாக தெலுங்­கானா மாநில முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் நெருங்­கிய வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

திரை­யு­ல­கில் மட்­டு­மல்­லாது அர­சி­ய­லி­லும் அதி­கம் நாட்­ட­முள்­ள­வர் பிர­காஷ்­ராஜ்.

பாஜ­கவை அதி­கம் விமர்­சிக்­கும் பிர­காஷ் ராஜ் தன்­னு­டைய கட்­சிக்கு வந்­தால், மாநி­லங்­க­ள­வை­யில் தன் கட்­சிக்கு வலு­கூ­டும் என்று டிஆர்­எஸ் எண்­ணு­வ­தாக அர­சி­யல் ஆலோ­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

பாஜ­க­விற்கு எதி­ராக ஆத­ரவு திரட்டி வரும் முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ், விரை­வில் நடி­கர் பிர­காஷ் ராஜை தெலுங்­கா­னா­வின் ஆளும்­கட்சி சார்­பில் (டிஆர்­எஸ்) மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக்­கு­வார் என கூறப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் மகா­ராஷ்­டிர முதல்­வ­ரைச் சந்­திக்க சென்ற சந்­தி­ர­சே­கர ராவை, திடீ­ரென பிர­காஷ் ராஜ் சந்­தித்­த­தால் இது­வரை இருந்துவந்த இது­கு­றித்த சந்­தே­கம் கூட தீர்ந்­து­விட்­ட­தாக முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் நெருங்­கிய வட்­டா­ரம் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

டிஆர்­எஸ் கட்­சி­யின் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக இருந்த பண்டி பிர­காஷ், அப்­ப­த­வி­யில் இருந்து விலகி மேலவை உறுப்­பி­ன­ரா­கியுள்ளார். மேலும், வரும் ஜூன் மாதம் டிஆர்­எஸ் கட்சி சார்­பில் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கும் லட்­சுமி காந்­தா­ராவ் மற்­றும் சீனி­வாஸ் ஆகி­யோ­ரின் பத­விக் கால­மும் நிறை­வ­டை­கிறது. ஆகவே காலியாகும் மூன்று இடங்களில் ஒன்றை பிர­காஷ் ராஜுக்கு முதல்­வர் அளிப்பார் எனக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!