உக்ரேனில் உள்ள இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி

புது­டெல்லி: உக்­ரே­னில் உள்ள இந்­தி­யர்­கள் நிலை குறித்து தொடர்ந்து விசா­ரித்து வரு­வ­தாக இந்­திய அரசு தரப்­பில் தக­வல் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. உக்­ரே­னில் 20,000க்கும் மேற்­பட்ட இந்­தி­யர்­கள் இருப்­பதாகக் கூறப்­ப­டு­கிறது. அவர்­க­ளு­டைய நிலை குறித்து அறிய தீவிர முயற்சி மேற்­கொள்­ளப்­படுகிறது.

இந்­தி­யர்­களை மீட்க சென்ற ஏர் இந்­தியா விமா­னம் குண்­டு­வீச்சு கார­ண­மாக திரும்பி வந்து விட் டது. இத­னால் இந்­தி­யர்­க­ளின் மீட்கும் பணி­யில் சிக்­கல் ஏற்­பட்டு உள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

முன்­னாள் சோவி­யத் ஒன்­றிய நாடான உக்­ரேன் 'நேட்டோ' அமைப்­பில் இணை­வ­தற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரி­வித்­தது. நேட்­டோ­வில் உக்­ரேன் சேர்­வது தனது நாட்­டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்கும் என்று ரஷ்யா வலியுறுத் தியது. இதை­ய­டுத்து உக்­ரேன் எல்­லை­யில் படை­க­ளைக் குவித்த ரஷ்யா இப்­போது முழு வீச்­சில் போரைத் தொடங்­கி­யுள்­ளது.

கிழக்கு உக்­ரே­னில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிக்குத் தீர்வு காண உத­வு­மாறு ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்கு உக்­ரேன் அதி­பர் வோலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்­தி­ருந்­தார். ஆனால், இதற்கு உட­ன­டி­யாக எந்­த­வி­த­மான பதி­லை­யும் ரஷ்யா தெரி­விக்­க­வில்லை.

இதற்­கி­டையே உக்­ரே­னில் உள்ள தங்­கள் நாட்­டின் தூதர்­களை பல நாடு­கள் திரும்­பப் பெற்று வரு­கின்­றன. இதே­போன்று மாண­வர்­கள் உள்­பட இந்­தி­யர்­களை நாடு திரும்ப இந்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. மாண­வர்­கள், குடி­மக்கள் உள்­பட பலரை ஏற்றிக் கொண்டு நாடு திரும்ப ஏர் இந்­தியா விமா­னம் ஒன்றை உக்­ரே­னுக்கு இந்­திய அரசு அனுப்­பி­யது. அந்த விமா­னம் 241 பய­ணி­க­ளு­டன் உக்­ரே­னி­லி­ருந்து டெல்­லிக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை புறப்­பட்­டது.

அந்த விமா­னம் 10.15 மணிக்கு இந்­தியா வர­வேண்­டும். ஆனால், டெல்லி இந்­திரா காந்தி அனைத்­து­லக விமான நிலை­யத்திற்கு ஒன்றரை மணி நேரம் தாம­தத்­து­டன் இரவு 11.30 மணிக்கு விமா­னம் வந்­த­டைந்­தது.

உக்­ரே­னில் போர் பதற்­றம் அதி­க­ரித்­துள்ள சூழ­லில் இந்­தி­யர்­களை நாடு திரும்பச் செய்­யும் பணி­யில் இந்­தியா முனைப்­பு­டன் உள்­ளது. உக்­ரே­னில் உள்ள இந்­திய தூத­கரத்­தில் ஏரா­ள­மான மாண­வர்­கள் தாய­கம் திரும்­பு­வ­தற்­காக காத்­தி­ருப்­ப­தா­க­வும் தக­வல்கள் தெரிவிக் கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!