பாஜக ஆட்சியைத் தடுக்க வரிந்துகட்டும் கட்சிகள்

புது­டெல்லி: இந்­தி­யா­வி­லேயே அதிக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­

க­ளைக் கொண்ட உத்­த­ரப் பிர­தே­சத்­தில் சட்­ட­ச­பைத் தேர்­தல் நடந்து வரு­கிறது. ஏழு கட்­டங்­க­ளாக நடை­பெ­றும் தேர்­த­லில், இது­வரை நான்கு கட்ட வாக்­குப்பதிவுகள் முடிந்­துள்­ளன.

நான்­காம் கட்ட வாக்­குப்­ப­திவு கடந்த புதன்­கி­ழமை 59 தொகு­தி­களில் அமை­தி­யாக நடை­பெற்று முடிந்­தது. இன்­னும் மூன்று கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெற உள்ள நிலை­யில் அந்த மாநி­லத்­தில் தொங்கு சட்­ட­மன்­றம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­க­மா­கக் காணப்­ப­டு­வ­தாக அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பேசப்­பட்டு வரு­கிறது.

முதல் கட்ட வாக்­குப்­ப­திவு தொடங்­கி­ய­தில் இருந்து இது­

கு­றித்த கருத்­து­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் சர்ச்­சை­களும் ஏற்­பட்­டுள்­ளன.

பிப்­ர­வரி 10ஆம் தேதி தொடங்­கிய உத்­த­ரப் பிர­தே­சத் தேர்­த­லில் ஆளும் பாஜ­க­வுக்­கும் முக்­கிய எதிர்க்­கட்­சி­யான சமாஜ்­வாடி கட்­சிக்­கும் இடையே நேர­டிப் போட்டி உரு­வா­னது. தனித்து போட்­டி­யி­டும் பகு­ஜன் (பிஎஸ்பி) மற்­றும் காங்­

கி­ரஸ் முறையே 3, 4வது இடங்­க­ளுக்கு தள்­ளப்­படும் நிலை.

முதல் இருகட்­டத் தேர்­தல்­களில் ஜாட் மற்­றும் முஸ்­லிம்­க­ளின் வாக்­கு­கள் அதி­க­மாக இருந்­தன. இதன் பல­னாக சமாஜ்­வாடி கூட்­டணி கட்­சி­யான ராஷ்­டி­ரிய லோக் தளம் (ஆர்­எல்டி) கட்­சிக்கு கணி­ச­மான தொகு­தி­கள் கிடைக்க வாய்ப்­பு­கள் தெரிந்­தன.

இத­னால், பாஜக மூத்த தலை­

வ­ரும் மத்­திய உள்­துறை அமைச்

­ச­ரு­மான அமித் ஷா தேர்­தல் முடி­வு­க­ளுக்குப் பின் ஆர்­எல்டி தலை­வர் ஜெயந்த் சவுத்­ரிக்­காக தம் கட்­சி­யின் கத­வு­கள் திறந்­தி­ருக்­கும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஆனால், அதற்கு சிறி­தும் வாய்ப்­பில்லை என்று ஜெயந்த் மறுப்பு தெரி­வித்­துவிட்டார்.

அதே­போல், காங்­கி­ர­சுக்கு பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டால் பாஜக ஆட்­சியைத் தடுக்க முயற்சி செய்யும் கட்­சிக்கு தங்­கள் ஆத­ரவு இருக்­கும் என்று காங்கிரஸ் பொதுச் செய­லா­ளர் பிரி­யங்கா காந்தி வதேரா கூறி­னார்.

இவர்­க­ளது கருத்­து­களை வைத்து, உத்­த­ரப் பிர­தே­சத்­தில் தொங்கு சட்­ட­மன்­றம் வர­லாம் என்ற கருத்து வெளி­யாகி ஓய்ந்­தது.

தற்­போது 4 கட்ட தேர்­தல் முடிந்த நிலை­யில் மீண்­டும் தொங்கு சட்­ட­மன்ற கருத்து அதி­க­ரித்­துள்­ளது. டெல்­லியை ஆளும் ஆம் ஆத்மி கட்­சி­யைச் சேர்ந்த முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் தேர்­தல் பிர­சா­ர­ரம் செய்­த­போது, ''ஆம் ஆத்­மிக்கு எத்­தனை தொகு­தி­களில் வெற்றி கிடைக்­கும் என யாரும் கவ­லைப்­படத் தேவை­யில்லை.

"ஏனெ­னில், தேர்­தல் முடி­வு­களில் தொங்கு சட்­ட­மன்­றம் ஏற்­படும் நிலை வந்­தால் பாஜக ஆட்சி அமை­வ­தைத் தடுப்­ப­வர்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­போம்,'' என்று உறு­தி­யா­கக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!