வழிப்போக்கர்கள் மாங்காய் பறிக்க உதவும் வீட்டு உரிமையாளர்

திரு­வ­னந்­த­பு­ரம்: வழி­யில் செல்­ப­வர்­கள் தன் வீட்டு மரத்­தில் இருந்து மாங்­காய் பறித்து சாப்­பி­டு­வ­தற்கு வச­தி­யாக வாச­லில் கொக்கி ஒன்றை வைத்­துள்­ள­னர் கேரள தம்­பதி.

உமர் அவத்­காட்­டி­லும் அவ­ரது மனைவி கதீ­ஜா­வும் கேரள மாநி­லம் மலப்­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளது வீட்­டின் முன்பு ஒரு பெரிய மாம­ரம் ஒவ்­வோர் ஆண்­டும் காய்த்து குலுங்­கும்.

இவர்­க­ளது வீட்­டிற்கு அரு­கில் மேல்­நி­லைப்­பள்­ளிக்­குச் செல்­லும் மாண­வர்­கள் கற்­களை வீசி மாம்­ப­ழங்­களைப் பறிக்க முயற்சி செய்­வர். வீசப்­படும் கற்­கள் பல­நே­ரங்­களில் வீட்­டி­னுள் வந்து விழும்.

இதைப்­பற்றி சிந்­தித்த உம்­மர் இதற்கு ஒரு தீர்­வைக் கண்­ட­றிந்­தார். அவர் தனது வீட்­டின் வாச­லில் ஒரு அறி­விப்பு பல­கை­யை­யும் ஒரு கொக்­கி­யை­யும் வைத்­தார். அந்த அறி­விப்பு பல­கை­யில், 'சாலையை நோக்கி சாய்ந்து கிடக்­கும் மாம்­ப­ழங்­கள் நாளைய குடி­மக்­க­ளான பள்ளி மாண­வர்­க­ளுக்­கா­னது.

"மாம்­ப­ழத்­தைப் பறிக்க வாயி­லுக்­குப் பக்­கத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள கொக்­கி­யைப் பயன்­ப­டுத்­த­வும்," என்று எழு­தப்­பட்­டுள்­ளது.

இத­னால் மகிழ்ச்சி அடைந்த மாண­வர்­கள் மாம்­ப­ழங்­களை தின­மும் பறித்­துச் செல்­கின்­ற­னர். சில நேரங்­களில் உம­ரும் மாண­வர்­களுக்கு மாம்­ப­ழம் பறிக்க உத­வு­கி­றார். கடந்த ஆண்­டும் உமர் இது­போன்றே கூறியிருந்தது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!