தேர்வு முறைகேடுகளுக்கு 10 கோடி ரூபாய் வரை அபராதம்

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தா­னில் போட்­டித்­தேர்வு முறை­கே­டு­க­ளைத் தடுக்கும் வகையில் தாக்­கல் செய்­யப்­பட்டுள்ள மசோ­தா­வில் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

ராஜஸ்­தா­னில் கடந்த ஆண்டு நடந்த ஆசி­ரி­யர் தகு­தித்­தேர்­வுக்­கான வினாத்­தாள் கசிந்­த­தைத் தொடர்ந்து தேர்வு ரத்­தா­னது.

இது­தொ­டர்­பாக உயர் அதி­கா­ரி­கள் உட்­பட 40க்கும் மேலா­னோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில் சட்­டத்­தி­ருத்த மசோ­தா­வுக்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டால், அரசு, வாரி­யங்­க­ளின் போட்­டித்­தேர்வு வினாத்­தாள்­க­ளைக் கசியவிடு­வது, அதற்­கான முயற்சி மேற்­கொள்­வது, முறை­கே­டாக வினாத்­தாள் பெறு­வது, தேர்­வில் ஆள்­மா­றாட்­டம் செய்­வது போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வோர், அதற்கு உத­வு­வோ­ருக்கு 5 முதல் 10 ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும். அத்­து­டன் 10 லட்­சம் முதல் 10 கோடி ரூபாய் வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

அத்­து­டன் முறை­கே­டு­களில் ஈடு­ப­டு­வோர், இரண்டு ஆண்­டு­களுக்குத் தேர்வுகளில் பங்­கேற்க முடி­யாது. தேர்வை நடத்­தும் நிறு­வ­னம் அல்­லது நிர்­வா­கத்­தில் உள்­ள­வர் குற்­றத்­தில் ஈடு­பட்­டது உறு­தி­யா­னால், தேர்­வுக்­கான முழு செல­வை­யும் அவர்­களே ஏற்க வேண்­டி­யி­ருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!