மாணவர் உடலை தாயகம் கொண்டுவர முயற்சி

புது­டெல்லி: உக்­ரே­னின் கார்­கிவ் நக­ரில் ரஷ்யா நடத்­திய ஆகா­யத் தாக்­கு­த­லில் மாண்ட இந்­திய மாண­வர் நவீன் சேக­ரப்­பா­வின் உட­லைத் தாய­கம் கொண்­டு­வர நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

கர்­நா­டகா மாநி­லத்­தைச் சேர்ந்த நவீன், கார்­கிவ் நக­ரின் தேசிய மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வம் பயின்­று­வந்­தார். ஆளு­நர் மாளி­கைக்கு அரு­கில் உள்ள பதுங்­கு­கு­ழி­யில் பதுங்கி இருந்த அவர் உண­வுப் பொருள் வாங்­கச் சென்ற வேளை­யில் ரஷ்­யா­வின் குண்­டு­வீச்­சுக்­குப் பலி­யா­னார். அது­கு­றித்து ஆழ்ந்த இரங்­கல் தெரி­வித்த இந்­திய வெளி­யு­றவு அமைச்சு, நவீ­னின் உடலை இந்­தியா கொண்­டு­வர முயற்சி எடுப்­ப­தா­க­வும் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், கர்­நா­டக மாநில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை நவீ­னின் குடும்­பத்­துக்கு இழப்­பீடு அறி­வித்­துள்­ளார். உக்­ரே­னில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கத்­து­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் அவ­ரது உடலை இந்­தியா கொண்­டு­வரு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். இதற்­கி­டையே, நவீன் உயி­ரி­ழந்­தது குறித்து இந்­தி­யப் பிர­த­மர் மோடி­யி­டம், ஐரோப்­பிய மன்­றத் தலை­வர் சார்­லஸ் மைக்­கேல் தொலை­பே­சி­யில் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார். பிரான்ஸ் அதி­பர் இம்­மா­னு­வேல் மேக்­ரா­னும் பிர­த­மர் மோடி­யு­டன் தொலை­பே­சி­யில் பேசி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!