ராகுல்: பெட்ரோல் விலை உயர்ந்தால் போராடுவோம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வருவதை அவர் சுட்டினார்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தவில்லை. இனி மோடி அரசாங்கம் பெட்ரோல், டீசலுக்கான விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி அதைக் கண்டித்து வீதிகளில் போராட்டம் நடத்தும் என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பணவீக்கம் என்பது மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அல்கா லம்பா செய்தியாளர்களிடம் கூறினார்.

டெல்லியில் ஒரு சிலிண்டருக்கு ரூ.105 உயர்த்தப்பட்ட பிறகு வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இருப்பினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏறவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!