7ல் இந்திய போர் விமானங்கள் சாகசம்

புது­டெல்லி: இம்­மா­தம் 7ஆம் தேதி இந்­திய போர் விமா­னங்­கள் சாக­சங்­களை நிகழ்த்தி காட்­ட­வி­ருக்­கின்­றன.

இந்­திய விமா­னப் படை­யின் 'வாயு சக்தி' என்ற பெய­ரில் நடை­பெ­றும் சாக­சத்­தில் முதல் முறை­யாக ரபேல் போர் விமா­ன­மும் பங்­கேற்­கிறது. பொக்­ரா­னில் நடை­ பெறும் நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் மோடி சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்கிறார்.

ராஜஸ்­தான் மாநி­லம் ஜெய்­சால்­மர் மாவட்­டம் பொக்­ரான் சர­கத்­தில் மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை 'வாயு சக்தி' என்ற விமா­னங்­கள் சாகச நிகழ்ச்­சியை இந்­திய விமா­னப்­படை நடத்தி வரு­கிறது.

கடை­சி­யாக 2019ஆம் ஆண்­டில் இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றது.

இம்­மா­தம் 7ஆம் தேதி விமான சாக­சக் காட்சி காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடக்­கிறது.

மொத்­தம் 148 விமா­னங்­கள் இதில் பங்­கேற்­கின்­றன.

இவற்­றில் 109 விமா­னங்­கள், போர் விமா­னங்­கள் ஆகும். 24 ஹெலி­காப்­டர்­கள், ஏழு சரக்கு விமா­னங்­கள் ஆகி­ய­வை­யும் காட்­சி­யில் இடம்­பெறுகின்­றன.

ஜாகு­வார், சுகோய்-30, மிக்-29, தேஜாஸ், ரபேல், மிராஜ்-2000 ஆகிய விமா­னப் படை­யின் விமா­னங்­கள் பங்­கேற்­கின்­றன.

'வாயு சக்தி' சாகச நிகழ்ச்­சி­யில் 'ரபேல்' விமா­னம் பங்­கேற்­பது இதுவே முதல்­முறை ஆகும்.

போர் விமா­னங்­கள் தயார்­நி­லை­யில் இருப்­பதை காட்­டும் வகை­யில் இந்த நிகழ்ச்­சியை விமா­னப்­படை நடத்­து­கிறது.

நிகழ்ச்­சி­யின் ஆரம்­பத்­தில் 17 ஜாகு­வார் ரக விமா­னங்­கள், 75வது சுதந்­திர தின ஆண்டை குறிக்­கும் வகை­யில் வானத்­தில் பறந்­த­படி '75' என்ற எண் வடி­வத்தை உரு­வாக்­கும். இறு­தி­யாக, ரபேல், தேஜாஸ், சுகோய்-30 ரக விமா­னங்­கள் சாக­சங்­களை நிகழ்த்­த­வி­ருக்­கின்­றன. அப்­பாச்சி, சினூக் உள்­ளிட்ட ஹெலி­காப்­டர்­களும் ஆகாஷ், ஸ்பை­டர் ஏவு­கணை தொகுப்­பு­களும் சாக­சத்­தில் ஈடு­படும் என்று விமா­னப் படை தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!