இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நாளுக்கு நாள் கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் குறைந்து வரு­வ­தால் இயல்பு வாழ்க்கை படிப்­ப­டி­யா­கத் திரும்பி வரு­கிறது.

இந்­திய அர­சும் வழக்­க­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம் என்று அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக கொரோனா 3வது அலை தொடர்ந்து வீழ்ச்­சிப் பாதை­யில் பய­ணித்து வரு­கிறது. இந்­தத் தரு­ணத்­தில் டெல்­லி­யில் நிதி ஆயோக் (சுகா­தா­ரம்) உறுப்­பி­னர் வி.கே.பால் மற்­றும் சுகா­தார அமைச்­சின் மூத்த அதி­கா­ரி­கள் வியா­ழக்­கி­ழமை அன்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னர்.

"இந்­தி­யா­வில் 15 முதல் 18 வயது வரை­யில் 74 விழுக்­காட்­டி­னர் முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். 39 விழுக்­காட்­டி­னர் இரண்டு முறை தடுப்­பூ­சி­களை போட்­டுள்­ள­னர்.

"அனை­வ­ரும் தடுப்­பூ­சியைப் போட்டு வரு­வ­தால் இந்­தி­யா­வில் கொரோனா இறப்­பு­கள் குறை­வாக இருந்­தன.

கிருமி தொற்­றால் ஏற்­படும் இறப்பை தடுப்­ப­தில் தடுப்­பூ­சி­கள் 98.9 விழுக்­காடு பய­னுள்­ள­தாக இருக்­கிறது. இரண்டு முறை தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்­வ­தால் அது மர­ணத்­துக்கு எதி­ராக 99.3 விழுக்­காடு பாது­காப்­பாக இருக் கிறது. கொரோ­னா­வின் அண்­மைய எழுச்­சியை சுகா­தா­ரப் பாது­காப்பு, முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளின் உழைப்பு, தடுப்­பூசி ஆகி­ய­வற்­றால் கட்­டுப்­ப­டுத்த முடிந்­துள்­ளது.

"இத­னால் தொற்று குறைந்து வரும் கட்­டத்­தில் இருக்­கி­றோம். பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள், ஓய்வு விடு­தி­கள், பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளைத் திறக்­க­லாம். வழக்­க­மான நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­ப­ட­லாம்.

"இருந்­தா­லும் தற்­போது 29 மாவட்­டங்­களில் கொரோனா பாதிப்பு விகி­தம் 10 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக உள்­ளது. 34 மாவட்­டங்­களில் ஐந்து முதல் 10 விழுக்­கா­டாக உள்­ளது.

"இத­னால் நாம் தொடர்ந்து கவ­ன­மா­க­வும் விழிப்­பா­க­வும் இருப்­பது அவ­சி­யம்," என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!