போரை நிறுத்த உதவுங்கள்

புது­டெல்லி: போர் நடக்­கும் கிழக்கு ஐரோப்­பிய நாடான உக்­ரே­னின் வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரி குலேபா சனிக்­கி­ழமை இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யு­டன் காணொ­ளி­யில் பேசி­னார்.

ரஷ்ய அதி­பர் புட்­டி­னு­டன் தொடர்­பு­கொண்டு உக்­ரேன் போரை நிறுத்­தும்­படி அவ­ரி­டம் எடுத்­துச் சொல்லி உத­வும்படி அவர் இந்­தியப் பிர­த­ம­ரைக் கேட்­டுக்­கொண்­டார்.

இந்­தி­யா­வின் உண­வுத் தேவை­கள் நிறை­வேற உத­வும் நாடு உக்­ரேன் என்­ப­தை அவர் சுட்­டி­னார்.

ஆகை­யால் போரை நிறுத்­து­வது இந்­தி­யா­வுக்­கும் நல்­லது என்று உக்ரேன் அமைச்சர் தெரி­வித்­தார். உக்­ரே­னில் இருந்து உண­வுப் பொருள்களை அதிகம் பெறும் நாடு­களில் இந்­தி­யா­வும் ஒன்று.

இத­னி­டையே, உக்­ரே­னின் சுமி நக­ரில் சிக்கி உள்ள ஏறக்­கு­றைய 700 இந்­திய மாண­வர்­கள் சுமார் 50 கி.மீ. தொலை­வில் உள்ள ரஷ்ய எல்­லைக்கு நடந்தே செல்­லப் போவ­தா­க­வும் அல்­லது 600 கி.மீ. தூரம் நடந்து மரி­ய­போல் நகரை அடை­யப்­போ­வ­தா­க­வும் தெரி­வித்து இருந்­த­னர்.

ஆனால் இந்­திய அர­சாங்­கத்­தின் ஆலோ­சனை, உறுதியை அடுத்து அவர்­கள் அந்­தத் திட்டத்தைக் கைவிட்­டு­விட்­ட­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

அந்த மாண­வர்­கள் சுமி நக­ரில் மருத்­துவக் கல்­லூரி விடு­தி­களில் மின்­சா­ரம், தண்­ணீர் இல்­லா­மல் பனிக்­கட்­டியை உரு­க­வைத்து அதைக் குடித்து உயிர் வாழ்ந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வைச் சேர்ந்த ஆயிரக்­கணக்­கான மாண­வர்­கள் உக்­ரேனில் மருத்­து­வம் படித்து வரு­கி­றார்­கள். அவர்­களை மீட்டு இந்தி­யா­வுக்குப் பத்­தி­ர­மா­கக் கொண்டு­வர இந்­திய அரசு பெரும் முயற்­சியை மேற்­கொண்டு இருக்­கிறது.

இது­வ­ரை­யில் 13,000 பேர் மீட்­கப்­பட்டு இருப்­ப­தாக மத்­திய அரசு தெரி­வித்து உள்­ளது. 21,000க்கும் மேற்­பட்ட இந்­தி­யர்­கள் உக்­ரேனை விட்டு வெளி­யேறி பக்­கத்து நாடு­களில் தஞ்­சம் அடைந்து இருக்­கிறார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!