மரம் ஏறும்  ஸ்கூட்டர்: விவசாயியின் கண்டுபிடிப்பு

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரைச் சேர்ந்தவர் 50 வயதான கணபதி பாட். விவசாயியான இவர் ஒவ்வொரு நாளும் பாக்கு மரங்கள் ஏறி அறுவடை செய்கிறார்.

பாக்கு மரங்களின் உயரம் சுமார் 18 முதல் 20 மீட்டர் வரை. அவற்றை ஒவ்வொரு நாளும் ஏறி இறங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அதோடு கணபதிக்கு வயதாகிவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முடிவெடுத்தார்.

தமது பொறியாளர் நண்பருடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘மர ஸ்கூட்டர்’ என்று பெயரிட்டார்.

இப்போது மரம் ஏறுவது சுலபமாகிவிட்டது. இந்த ஸ்கூட்டர் மரம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சில வினாடிகளே எடுத்துகொள்கிறது.

ஸ்கூட்டரை வடிவமைத்ததோடு நின்றுவிடாமல், அதை உற்பத்திச் செய்து விற்கவும் செய்துள்ளார் கணபதி.

இதுவரை 300க்கும் மேற்பட்ட ஸ்கூட்டரகளை விற்றுள்ளதாக அவர் கூறுகிறார். ஒரு ஸ்கூட்டரின் விலை 62,000 ரூபாய்.

“இந்த ஸ்கூட்டர் மற்றவர்களுக்கு உதவுவது எண்ணி நான் பெருமையடைகிறேன. என் வாழ்க்கை முழுமையடைந்துவிட்டது என நான் கருதுகிறேன்,” என்கிறார் கணபதி


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!