இந்தியாவுக்கு இடம்பெயர விரும்பும் நிறுவனங்கள்

புது­டெல்லி: உக்­ரேன், ரஷ்யா இடை­யே­யான போர் கார­ண­மாக அவ்­விரு நாடு­க­ளி­லும் பணி­யாற்­றிய சுமார் நூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தக­வல் தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் வேலை இழந்­துள்­ள­னர்.

அவ்­விரு நாடு­க­ளி­லும் இயங்கி வரும் பல தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வுக்கு இடம்­பெ­யர திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

போர் பதற்­றம் கார­ண­மாக அந்­நி­று­வ­னங்­களில் ஊழி­யர்­கள் பாது­காப்­பற்ற சூழலை உணர்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக ஏற்­கெ­னவே பெரும்­பா­லான தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­களை வீட்­டில் இருந்­த­ப­டியே பணி­யாற்­று­மாறு கூறி­யுள்­ளன. உக்­ரேன், ரஷ்­யா­வில் உள்ள நிறு­வ­னங்­களில் பணி­யாற்றி வரும் ஊழி­யர்­களும் இத்­த­கைய ஏற்­பா­டு­க­ளைத்­தான் பின்­பற்றி வரு­கின்­ற­னர்.

எனி­னும், போர் ஓய்ந்த பிற­கும்­கூட இவ்­விரு நாடு­களும் தங்­கள் ஊழி­யர்­க­ளுக்கு முழு­மை­யான பாது­காப்பை வழங்க முடி­யுமா எனும் கேள்­வியை இந்­நி­று­வ­னங்­கள் எழுப்பி உள்­ள­தா­கத் தெரி­கிறது. இதை­ய­டுத்தே இந்­தியா உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு இடம்­பெ­யர தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் விரும்­பு­வ­தாக ஊட­கத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், தெற்­கா­சிய நாடு­களில் வலு­வா­கக் காலூன்­றும் திட்­டத்தை பல நிறு­வ­னங்­கள் கடந்த சில ஆண்­டு­க­ளாக செயல்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!