டெல்லியிலும் மும்பையிலும் முகக்கவசம் கட்டாயமல்ல

புது­டெல்லி: இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யி­லும் வணி­கத் தலை­நகர் மும்­பை­யி­லும் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மல்ல என்று அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

டெல்­லி­யில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 113 பேர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு அத்­தொற்­றால் மேலும் எவ­ரும் இறக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், ஆளு­நர் அனில் பைஜால் தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் நடந்த டெல்லி பேரி­டர் மேலாண்மை ஆணை­யக் கூட்­டத்­தில், பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­யா­தோ­ருக்கு இனி அப­ரா­தம் விதிப்­பது இல்லை என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அதே நேரத்­தில், கூட்­ட­மான இடங்­களில் பொது­மக்­களை முகக்­க­வ­சம் அணி­யும்­படி ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இதே­போல, மும்­பை­யில் பொது இடங்­களில் கட்­டா­ய­மாக முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை என்று மும்பை மாந­க­ராட்சி அறி­வித்­து இருக்கிறது. அங்கு புதி­தாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தொடர்ந்து நான்­கா­வது நாளாக அங்கு கிருமித் தொற்றால் எவ­ரும் உயி­ரி­ழக்­க­வில்லை.

"இப்­போ­தைக்கு, கொரோனா பர­வல் கட்­டுக்­குள் இருந்து வரு­வ­தால் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆகை­யால், கிரேட்­டர் மும்பை பகு­தி­யில் முகக்­க­வ­சம் அணி­யா­தோ­ரி­டம் ரூ.200 அப­ரா­தம் வசூ­லிக்­கப்­படாது," என்று மும்பை மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, இன்று ஏப்­ரல் 2ஆம் தேதி­யில் இருந்து கட்­டாய முகக்­க­வச விதியை அகற்­று­வ­தாக மகா­ராஷ்­டிர மாநி­ல­மும் அறி­வித்­துள்­ளது.

நாட்­டில் கொரோனா பர­வல் குறைந்­துள்ள நிலை­யில், கட்­டாய முகக்­க­வச விதியை மற்ற மாநி­லங்­களும் விரை­வில் தளர்த்­த­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும் 1,335 பேர் பாதிப்பு

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 1,335 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நேற்­றுக் காலை அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது.

இது, முந்­திய நாளைக் காட்­டி­லும் சற்று அதி­கம். நேற்று முன்­தி­னம் 1,233 பேருக்­குத் தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

கொரோனா தொற்­றால் மேலும் 52 பேர் மாண்­டு­விட்­ட­னர். இதை அ­டுத்து, மொத்த பாதிப்பு 43,025,775 ஆக­வும் மாண்­டோர் எண்­ணிக்கை 521,181 ஆக­வும் உயர்ந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!