800 மருந்துகள் 10% விலையேற்றம்

புதுடெல்லி: உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 800க்கும் மேற்பட்ட மருந்துகள் நேற்று முதல் 10 விழுக்காட்டிற்குமேல் விலையேற்றம் கண்டன.

அதிகபட்சமாக எத்தனை விழுக்காடு விலை உயர்த்தப் பட்டது என்பது தெரிவிக்கப் படவில்லை. ஆயினும், முந்திய ஆண்டுகளை ஒப்புநோக்க, ஒட்டுமொத்த விலைக் குறியீடு 10.76% உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை மதிப்பீட்டு ஆணையம் தெரிவித்தது. கடந்த 25 ஆண்டுகளில் மருந்துகளின் விலை இந்த அளவிற்கு உயர்த்தப்பட்டது இல்லை.

பாராசிட்டமால், உயிர்ச்சத்து மாத்திரைகள், நீரிழிவு, இதயநோய்க்கான மருந்துகள், கொவிட்-19 சிகிச்சைக்கான சில மருந்துகள் உள்ளிட்டவை விலையேற்றம் கண்டுள்ளன.

மருந்து தயாரிப்பதற்கான செலவு, இறக்குமதி வரி போன்றவற்றின் அதிகரிப்பு காரணமாக இம்மருந்துகளின் விலையை 10% உயர்த்தும்படி இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!