பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தனிப்படை

லக்னோ: பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளைத் தடுக்கவும் அவர்­கள் சுதந்­தி­ர­மாக நடமாடவும் உத்­த­ரப் பிர­தேச மாநில அரசு ரோமியோ எதிர்ப்­புப் படையை மீண்­டும் செயல்­ப­டுத்­தி­யுள்­ளது.

அந்த மாநி­லத்­தில் கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக பாஜக ஆட்சி நடை­பெற்­றது. அப்­போது, பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தற்­காக ரோமியோ எதிர்ப்­புப் படை உரு­வாக்­கப்­பட்­டது. இந்­தப் படை­யைச் சேர்ந்­த­வர்­கள் பொது இடங்­களில் பெண்­க­ளுக்­குத் தொல்லை கொடுப்­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து அம்­மா­நில அரசின் ரோமியோ எதிர்ப்­புப் படை மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட ரோமியோ எதிர்ப்­புப் படை கடந்த 2ஆம் தேதி மீண்டும் தனது பணி­யைத் தொடங்­கி­யது.

அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் சந்­தை­கள், கல்வி நிலையங்கள் உள்ள பகு­தி­களில் காவல்­துறை அதி­கா­ரி­கள் சுற்­றுக்­கா­வல் பணி­ மேற்கொள்வர். அப்­போது பெண்­கள் இருக்­கும் பகு­தி­யில் தேவை­யின்றி சுற்­றித் திரிப­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும்.

மேலும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்செய­லில் ஈடு­ப­டு­வோ­ரி­ட­ம் இருந்து எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என்று பெண்­க­ளி­டம் அவர்­கள் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

- பிடிஐ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!