‘அதீத வறுமையை இந்தியா கிட்டத்தட்ட ஒழித்துவிட்டது’

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அதீத வறுமை என்­பது கிட்­டத்­தட்ட ஒழிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக அனைத்­து­லக நாணய நிதி­யம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 40 ஆண்­டு­கா­ல­மாக நாட்­டில் நுகர்வு சமத்­து­வ­மின்மை என்­பது படிப்­ப­டி­யாக குறைந்து வரு­வ­தா­க­வும் அந்­நி­தி­யம் மேற்­கொண்ட ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

உண­வுப்­பொ­ருள் விநி­யோ­கம் (ரேசன்) வறுமை ஒழிப்­பில் முக்­கிய பங்கு வகித்­துள்­ளது என்­றும் கொரோனா நெருக்­கடி வேளை­யி­லும்­கூட, தீவிர வறுமை அதி­க­ரிக்­கா­த­தற்கு இதுவே முக்­கிய கார­ணம் என்­றும் அந்த நிதி­யத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நாட்­டில் கடும் ஏழ்மை நிலை­யில் இருந்த மக்­க­ளின் எண்­ணிக்கை கொரோனா காலத்­தில் அதிகரிக்­க­வில்லை என்­றும் உணவு மானி­யத்­திட்­டம் விரி­வு­படுத்­தப்­பட்­ட­தால், வறுமையில் உள்­ள­வர்­கள் எதிர்­கொண்ட பாதிப்பு பாதி­யாகக் குறைந்­தது என்­றும் நாணய நிதி­யத்­தின் நிபு­ணர் குழு கூறியுள்ளது.

உண­வுப்­பொ­ருள் விநி­யோக முறை கடந்த இரண்டு ஆண்­டு­களில் நல்ல பலனைக் கொடுத்­துள்­ள­தா­க­வும் அனைத்துலக நாணய நிதி­யம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!