ரஷ்யாவுடனான வர்த்தகத்தை டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் நிறுத்துகின்றன

இந்தியாவின் இரண்டு மிகப் பெரிய நிறுவனங்கள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை நிறுத்தவுள்ளன. 

ரஷ்யா- உக்ரேன் போர் குறித்து இந்திய அரசாங்கம் நடுநிலை வகிக்கும் வேளையில், டாடா ஸ்டீல் நிறுவனமும் இன்ஃபோசிஸ் நிறுவனமும் அந்த முடிவை எடுத்துள்ளன. 

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கூடுதல் எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது.  

இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் கூறியது. 

டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம், ஐரோப்பாவின் மிகப் பெரும் எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்று. 

வர்த்தகத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க திட்டம் உள்ளது என்று டாடா ஸ்டீல் கூறியது. 

இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தனது உற்பத்தி ஆலைகள் ரஷ்யாவைத் தவிர வேறு இடங்களிலிருந்து மூலப் பொருள்களை வாங்கியுள்ளதாக அது குறிப்பிட்டது. 

சில நாள்களுக்கு முன்னர், இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் உள்ள அதன் செயல்பாடுகளை வேறு இடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறியது.    
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!