இந்தியாவில் சியாவ்மி தொலைபேசி நிறுவனத்திடமிருந்து 5500 கோடி ரூபாய் பறிமுதல்

சீனாவின் சியாவ்மி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளிலிருந்து இந்திய அதிகாரிகள் 5,500 கோடி ரூபாயை (ஒரு பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பறிமுதல் செய்துள்ளனர்.

ராயல்டி எனப்படும் உரிமைத் தொகையை அனுப்புவதாகச் சொல்லி சியாவ்மி இந்தியா தன் வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பியதாக இந்திய அமலாக்கத் துறை கூறியது.

அந்த விவகாரம் பற்றி இந்திய அமலாக்கத் துறை கடந்த பிப்ரவரி மாதம் விசாரிக்கத் தொடங்கியது.

சீனா, அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த மூன்று தரப்புகளுக்கு பெரும்பணம் அனுப்பப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர்.

சீன தலைமையகத்தின் உத்தரவின்பேரில் அந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள சியாவ்மி நிறுவனம் அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது.

சியாவ்மி 2014ல் இந்தியாவில் செயல்படத் தொடங்கியது.

அதற்கு அடுத்த ஆண்டே அது பணத்தை சட்டவிரோதமாக அனுப்பத் தொடங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் இந்திய அமலாக்கத் துறை, சியாவ்மி, ஹுவாவேய் போன்ற சீன தொலைபேசி நிறுவனங்களின் இந்திய அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!