‘கர்நாடக முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி பேரம் பேசினர்’

பாஜக எம்எல்ஏ பசனகவுடா வெளியிட்ட தகவலால் கட்சித் தலைமைக்கு நெருக்கடி

பெங்­க­ளூரு: முதல்­வர் பத­விக்­காக தம்­மி­டம் ரூ.2,500 கோடி பேரம் பேசப்­பட்­ட­தாக கர்­நா­டக பாஜக எம்­எல்ஏ பச­ன­க­வுடா பட்­டீல் யத்­னால் தெரி­வித்­துள்­ளார்.

அவ்­வாறு கேட்ட தொகையை ஒப்­ப­டைத்­தால் எந்­த­வி­த­மான சிக்­க­லும் இன்றி கர்­நா­டகா முதல்­வ­ரா­கத் தாம் பொறுப்­பேற்க இய­லும் என டெல்­லி­யில் இருந்து வந்த இடைத்­த­ர­கர்­கள் தம்­மி­டம் பேரம் பேசி­ய­தா­க­வும் பச­ன­க­வுடா கூறி இருப்­பது பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கர்­நா­ட­கா­வில் தற்­போது பாஜக ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. அங்­குள்ள விஜ­யாப்­புரா நகர சட்­டப்­பே­ர­வைத் தொகுதி எம்­எல்­ஏ­வாக உள்­ளார் பச­ன­க­வுடா பட்­டீல் யத்­னால். இரண்டு முறை அவர் மாநில அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­துள்­ளார்.

எனி­னும் இம்­முறை முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை தலை­மை­யி­ய­லான அமைச்­ச­ர­வை­யில் அவர் இடம்­பெ­ற­வில்லை.

இதை­ய­டுத்து முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா, மாநில பாஜக தலை­வர்­கள் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளைக் கூறி வந்­த­து­டன் சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­க­ளை­யும் தெரி­வித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், அவற்­றின் உச்­ச­மாக பெல­கா­வில் பகு­தி­யில் நடை­பெற்ற கட்சி நிகழ்ச்­சி­யில் பேசிய அவர், தமக்கு அமைச்­சர் பதவி கிடைப்­பதை தடுக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் கர்­நா­டக பாஜக தலை­வர்­கள் சிலர் செயல்­பட்­ட­தா­கக் குற்­றம்­சாட்­டி­னார்.

" பஞ்­ச­ம­சாலி சமூ­கத்தை சேர்ந்த முரு­கேஷ் நிரா­னிக்கு அமைச்­சர் பதவி வழங்கி உள்­ள­னர். அவ­ரி­டம் நிறைய பணம் உள்­ளது. அத­னால் அமைச்­ச­ரா­கி­விட்­டார்.

"ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுத்து சிலர் அமைச்­சர் ஆகி­றார்­கள். டெல்­லி­யில் இருந்து வந்த இடைத்­த­ர­கர்­கள் சிலர் என்­னி­டம், ரூ.2,500 கோடி கொடுத்­தால் முதல்­வர் பதவி வழங்­கு­வ­தாக கூறி­னார்­கள்.

"உண்மையில் அவ்­வ­ளவு பணத்தை எங்கே வைப்­பது, வீட்டில் வைப்­பதா? அல்­லது கிடங்­கில் வைப்­பதா? அர­சி­ய­லில் எல்லா இடங்­க­ளி­லும் ஏமாற்­று­கி­றார்­கள்," என்­றார் பச­ன­க­வுடா பட்­டீல்.

கர்­நா­டக மாநில பாஜ­க­வில் உட்­கட்­சிப் பூசல் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. நடப்பு முதல்­வர் பச­வ­ராஜ் பொம்­மையை மாற்ற வேண்­டும் என சில தரப்­பி­னர் போர்க்­கொடி உயர்த்தி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் பச­ன­க­வுடா, பாஜக நிர்­வா­கி­கள் சிலர் தம்மை முதல்­வ­ராக நிய­மிக்க ரூ.2,500 கோடி கேட்­ட­தா­கக் கூறி­யி­ருப்­பது அக்­கட்­சித் தலை­மைக்­குப் புதிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!