பற்றாக்குறை: மூடப்பட்ட 20 நிலக்கரி நிறுவனங்கள் மீண்டும் திறப்பு

புது­டெல்லி: நிலக்­கரி பற்­றாக்­குறை தொடர்ந்து அதி­க­ரித்து வரும் நிலை­யில், நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் ஏற்­கெ­னவே மூடப்­பட்­டுள்ள இரு­பது நிலக்­கரிச் சுரங்­கங்­களை மீண்­டும் திறக்க மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், மாநில அர­சு­கள் நிலக்­கரி இறக்­கு­மதி தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக நாடு முழு­வ­தும் பர­வ­லாக அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு நிலவி வரு­கிறது. இத­னால் கோடை காலத்­தில் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சிறு, குறு தொழில்­களுக்­குப் பாதிப்பு ஏற்­பட்டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் பெருகி வரும் நிலக்­கரித் தேவையைச் சமா­ளிக்க, ஏற்­கெ­னவே மூடப்­பட்­டி­ருந்த அல்­லது உற்­பத்தி நிறுத்­தப்­பட்­டி­ருந்த நிலக்­கரிச் சுரங்­கங்­களை மீண்­டும் திறக்க மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக நிலக்­கரி இந்­தியா லிமி­டெட் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான இரு­பது சுரங்­கங்­களை திறக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. எனி­னும், இந்­தச் சுரங்­கங்­களை மத்­திய அரசு நேர­டியாக இயக்­காது. மாறாக, வரு­வாய் பகிர்வு அடிப்­ப­டை­யில் தனி­யார் நிறுவனங்கள் மூலம் இயக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

மேலும், உற்­பத்தி செய்­யப்­படும் நிலக்­க­ரியை நடப்புச் சந்தை விலைக்கு சம்­பந்­தப்­பட்ட தனி­யார் நிறு­வ­னங்­களே விற்­பனை செய்­யும். இதன் மூலம் கிடைக்­கும் வரு­வா­யில் ஒரு பகு­தியை நிலக்­கரி இந்­தியா நிறு­வ­னத்­துக்கு தரவேண்­டும் என்று ஒப்­பந்­தம் செய்­து­கொள்­ளப்­படும் எனத் தெரி­கிறது.

நேற்று முன்­தி­னம் இரு­பது நிலக்­கரி சுரங்­கங்­கள் மீண்­டும் செயல்­பாட்­டுக்கு வந்­துள்­ளன. இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மத்­திய நிலக்­க­ரித்­துறை அமைச்­சர் பிர­க­லாத் ஜோஷி,

நிலக்­கரி உற்­பத்­தி­யில் தற்­சார்பு நிலையை அடை­ய­வும் இறக்­கு­ம­தியை குறைக்­க­வும் மத்­திய அரசு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

மத்­திய அர­சின் புதிய திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இணைய தனி­யார் துறை­க­ளுக்கு அழைப்பு விடுப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்­தி­யில் பிர­த­மர் மோடி நிர்­ண­யித்த தமது அமைச்சு இலக்கை எட்­டி­யுள்­ள­போதும் நாட்­டிற்கு கூடு­தல் நிலக்­கரி தேவைப்­ப­டு­கிறது என்­றார்.

"இந்த இரு­பது சுரங்­கங்­களில் இருந்து பிரித்­தெ­டுக்­கக்­கூ­டிய இருப்­புக்­கள் சுமார் 38 கோடி டன் உள்­ளன.

அதில் 10 முதல் 15 விழுக்­காடு அளவு பிரித்­தெ­டுக்­கப்­பட்­டா­லும், சுமார் 4 கோடி டன் உயர்­தர நிலக்­கரி நமக்­குக் கிடைக்­கும். இந்த நட­வ­டிக்­கை­யில் தனி­யார் துறை­யி­ன­ருக்கு மத்­திய அரசு முழு ஆத­ரவு வழங்­கும் என உறுதி அளிக்கிறேன்," என்­றார் அமைச்சர் பிர­க­லாத் ஜோஷி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!