தினமும் ஒரு கிலோமீட்டர் குதித்தபடியே பள்ளிக்குச் செல்லும் ஒற்றைக் கால் சிறுமி 

பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற வேட்கையில் தினமும் ஒரு காலில் குதித்து குதித்து செல்கிறார் பீகாரைச் சேர்ந்த சீமா என்ற ஒரு சிறுமி. 

பத்து வயது சீமாவின் முனைப்பைக் கண்டு வியந்த இந்தி நடிகர் சோனு சூட், அவருக்கு உதவ முன் வந்திருக்கிறார். 

ஜாமுய் மாவட்டத்தில் வசிக்கும் சீமா மான்ஜி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். 

அவரது காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆனால் காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை சீமா. 

பள்ளிதான் முக்கியம் என்பது அவருக்குத் தெரியும். 

அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பள்ளி. 

தினமும் அந்த ஒரு கிலோமீட்டரை குதித்துக் குதித்துக் கடக்கிறார் சீமா. 

 

அவர் ஒற்றைக் காலில் பள்ளிக்குச் செல்லும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. 

அதைப் பார்த்து நெகிழ்ந்துபோனார் அருந்ததி திரைப்பட வில்லன் சோனு சூட்.

உண்மை வாழ்க்கையில் பல நற்செயல்களுக்கு உதவி வரும் சோனு சூட், சிறுமி இனி இரண்டு கால்களில் பள்ளிக்கு நடந்து செல்வார் என்று உறுதி கூறியுள்ளார்.

தமது அறக்கட்டளை வழியாக சீமாவுக்கு சோனு சூட் உதவுவார் என்று தெரிகிறது.  
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!