தேயிலைத் தோட்டத்தில் 15 வயதுச் சிறுமியைச் சீரழித்த நால்வர் கைது

திருவனந்தபுரம்: பதின்ம வய­துச் சிறுமி கூட்டுப் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வம் கேர­ளா­வில் பெரும் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கேரள தேயி­லைத் தோட்டங்களில் நூற்­றுக்­க­ணக்­கான வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் வேலை பார்க்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் இடுக்கி மாவட்­டம், சந்­தன்­புரா பகு­தி­யில் உள்ள தேயிலைத் தோட்­டத்­தில் மேற்கு வங்­கத்­தைச் சேர்ந்த தம்­ப­தி­யர் சில தினங்­க­ளுக்கு முன்பு வேலை பார்க்க வந்­துள்­ள­னர். அத்­தம்­பதி­ய­ரின் 15 வயது மகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தன் நண்­பரு­டன் அரு­கி­லுள்ள தேயி­லைத் தோட்­டத்­தைச் சுற்­றிப்­பார்க்­கச் சென்­றார். சிறு­மி­யின் நண்­ப­ரும் மேற்கு ­வங்கத்தைச் சேர்ந்­த­வர்­தான்.

ஏற்­கெ­னவே அறி­மு­க­மா­ன­வர் என்­ப­தால் அந்த நண்­ப­ரு­டன் தங்கள் மகளை அனுப்பி வைத்­துள்­ள­னர் சிறு­மி­யின் பெற்­றோர்.

இந்­நி­லை­யில், தேயி­லைத் தோட்­டத்­தில் சிறு­மி­யும் அவ­ரது நண்­ப­ரும் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது முன்­பின் அறி­மு­க­மற்ற நான்கு பேர் திடீ­ரென அங்கு வந்­துள்­ள­னர். மேலும் சிறு­மி­யின் நண்­ப­ரைக் கடு­மை­யா­கத் தாக்­கிய பின்­னர், பதின்ம வய­துச் சிறுமி என்­றும் பாரா­மல் நான்கு பேரும் மாறி­மாறி, பாலி­யல் வன்­கொ­டுமை புரிந்­துள்­ள­னர்.

தம்மை விட்­டு­வி­டு­மாறு அச்­சிறுமி கத­றி­ய­போது நால்­வ­ரும் மன­மி­ரங்­க­வில்லை.

இந்­நி­லை­யில், சிறு­மி­யின் நண்­பர் உதவி கேட்டு கூக்­கு­ரல் எழுப்ப, அதைக் கேட்டு தூரத்­தில் இருந்த சில தொழி­லா­ளர்­கள் ஓடி­வந்­த­னர். அதைக் கண்டு நான்கு பேர் கொண்ட அந்­தக் கும்­பல் அங்­கிருந்து ஓட்­டம் பிடித்­தது.

எனி­னும் பாதிக்­கப்­பட்ட சிறுமி அளித்த புகா­ரின் பேரில் வழக்­குப்­ப­திவு செய்து காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­ட­போது, சிறு­மி­யைச் சீர­ழித்த நால்­வ­ரும் அதே­ ப­கு­தி­யில் உள்ள ஏலக்­காய் தோட்­டத்­தில் வேலை பார்க்­கும் தொழி­லா­ளர்­கள் எனத் தெரி­ய­வந்தது.

மேலும், அவர்­களில் இரு­வர் சிறு­வர்­கள் என்ற அதிர்ச்­சித் தக­வ­லும் வெளி­யா­கி­ உள்­ளது.

நால்­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் காவல்­துறை விசா­ரணை நீடித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!