நூபுர் ஷர்மாவுக்கு காவல்துறை பாதுகாப்பு

சென்னை: நபி­கள் நாய­கம் குறித்து அவ­தூ­றான கருத்­து­களைத் தெரி­வித்த பாஜக செய்தி தொடர்­பா­ளர் நூபுர் ஷர்­மா­வுக்­கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் டெல்லி காவல்­துறை பாது­காப்பு அளித்­துள்­ளது.

அண்­மை­யில் தொலைக்­காட்சி விவா­தம் ஒன்­றில் கலந்­து­கொண்ட போது நூபுர் ஷர்மா தெரி­வித்த கருத்­து­கள் இஸ்­லா­மி­யர்­கள் மத்தி­யில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­படுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், பாஜ­க­வின் மற்­றொரு செய்­தி­யா­ளர் நவீன் ஜிண்டாலும் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் நபி­கள் குறித்து சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை பதிவு செய்­தி­ருந்­தார்.

இதற்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் கடும் எதிர்ப்பை தெரி­வித்­ததை அடுத்து, இரு­வர் மீது பாஜக தலைமை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இரு­வ­ருக்­கும் எதி­ராக மும்பை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், இந்­தப் புகா­ரின் அடிப்­ப­டை­யில் நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இரு­வ­ரி­ட­மும் நேரில் விசா­ரணை நடத்­தப்­படும் என மும்பை காவல்­துறை ஆணை­யர் சஞ்­சய் பாண்டே தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரத்­தில் சட்ட நடை­மு­றை­கள் முறை­யா­கப் பின்­பற்­றப்­படும் என்­றும் நூபுர் ஷர்மா நேரில் வர­வ­ழைக்­கப்­பட்டு அவ­ரது வாக்­கு­மூ­லம் பதிவு செய்­யப்­படும் என்­றும் சஞ்­சய் பாண்டே கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் நூபுர் ஷர்மா, அவ­ரது குடும்­பத்­தா­ருக்கு தொடர் மிரட்­டல்­கள் வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இது தொடர்­பாக அவ­ரது தரப்பு டெல்லி காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளது.

தாங்­கள் மிரட்­டப்­ப­டு­வ­தாகவும் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் நூபுர் ஷர்மா தெரி­வித்­ததை அடுத்து, அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக உய­ர­தி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார் என ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!