ஆந்திராவில் மேலும் ஒரு சிறுமி சீரழிப்பு

ஹைத­ரா­பாத்: இளம் பெண்­களும் சிறு­மி­களும் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­வது அதி­க­ரித்து வரும் நிலை­யில், ஹைத­ரா­பாத்­தில் மேலும் ஒரு சிறுமி சீர­ழிக்­கப்­பட்­டுள்­ளார்.

கடந்த சில தினங்­களில் மட்­டும் அங்கு மூன்று சிறு­மி­கள் இத்­த­கைய கொடு­மைக்கு ஆளாகி உள்­ள­னர்.

மூன்­றா­வது சம்­ப­வ­மாக நேற்று முன்­தி­னம் விஜய் நகர் பகு­தி­யில் ஆத­ர­வற்­றோ­ருக்­கான கல்­லூரி மாண­வி­கள் விடு­தி­யில் தங்­கி­யுள்ள சிறுமி சீர­ழிக்­கப்­பட்­டுள்­ளார்.

மாணவி படிக்­கும் கல்­லூரி அருகே உள்ள கடை­யில் 23 வய­தான சுரேஷ் என்­ப­வர் வேலை பார்த்து வரு­கி­றார். இரு­வ­ரும் நெருங்­கிப் பழ­கிய நிலை­யில், மாண­விக்கு புதிய கைப்பே­சியை வாங்­கிக் கொடுத்­துள்­ளார் சுரேஷ்.

இந்­நி­லை­யில், தனது தோழி­யின் காத­லர் ராகுல் என்­ப­வ­ரின் பிறந்­த­நாள் விழா­வில் பங்­கேற்க சுரேஷை அழைத்­துள்­ளார் அம்­மாணவி. இரு­வ­ரும் அந்­நி­கழ்­வில் பங்­கேற்­ற­னர்.

அதன் பின்­னர் இரவு 12 மணிக்கு மேலும், ராகு­லின் காரில் மாண­வியை ஏற்­றிக்­கொண்டு விடுதி நோக்­கிச் சென்ற சுரேஷ், திடீ­ரென்று பாதையை மாற்றி மக்­கள் நட­மாட்­டம் இல்­லாத பகு­திக்­குச் சென்­றுள்­ளார். பின்­னர் காரில் வைத்து மாண­வியை அவர் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்தி உள்­ளார்.

விடு­திக்­குத் திரும்­பிய பின்­னர், இது­கு­றித்து விடுதிக் காப்­பா­ளரிடம் விவ­ரம் தெரி­வித்­துள்­ளார் அம்­மாணவி. அதை­ய­டுத்து, காவல்­துறை­யில் புகார் அளிக்­கப்­பட்­ட­தன் பேரில், சுரேஷை போக்சோ சட்­டத்­தின் கீழ் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!