நாகப்பாம்பை கணவராக நினைத்து வழிபட்ட பெண்

பெங்களூரு: வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை, கணவராகக் கருதி வழிபட்டுள்ளார் ஒரு பெண்மணி.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மானஷா. சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் காலமாகிவிட்டார். அதன் பிறகு தனித்து வசித்து வந்தார் மானஷா.

கடந்த 4 நாள்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. அதைக்கண்டு மானஷா பயந்து நடுங்கவில்லை. மாறாக, அதற்கு பால் ஊற்றி நன்கு கவனித்துக்கொண்டார்.

இறந்துபோன தன் கணவர் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்து தன்னைத் தேடி வந்திருப்பதாக மானஷா நம்பியதே இதற்குக் காரணம். கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயற்சி மேற்கொண்டபோது அதை தன் கணவர் என்று கூறி, அதை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்தார் மானஷா. இதையடுத்து, கிராம மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அந்தப் பாம்பை பிடித்துச் சென்றுவிட்டதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!