தங்கக் கடத்தல் வழக்கில் திடீர்த் திருப்பம்

திரு­வ­னந்­த­பு­ரம்: தங்­கக் கடத்­தல் விவ­கா­ரத்­தில் விசா­ரிக்­கப்­படும் கேர­ளா­வைச் சேர்ந்த முன்­னாள் தூத­ரக அதி­காரி ஸ்வப்னா, அம்­மா­நில முதல்­வர் பினராயி விஜ­யன்­மீது முன்­வைக்­கும் குற்­றச்­சாட்­டுக்கு ஆத­ர­வான ஒலிப்­ப­திவை வெளி­யி­டப்­போ­வ­தாக மிரட்­டல் விடுத்­துள்­ளார்.

கேர­ளா­வில் கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடந்த தங்கக் கடத்­தல் வழக்­கில் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளுக்­கான தூத­ர­கத்­தில் பணி­பு­ரிந்த முன்­னாள் பெண் அதி­காரி ஸ்வப்னா கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட ஸ்வப்னா கடந்த சில நாள்­க­ளுக்கு முன்பு நீதி­மன்­றத்­தில் ரக­சிய வாக்­கு­மூ­லம் அளித்­தார். அதில் கேரள முதல்­வர் பினராயி விஜ­ய­னுக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் இந்த வழக்­கில் நேர­டித் தொடர்பு இருப்­ப­தாக ஸ்வப்னா குற்­றம் சாட்­டி­னார்.

ஸ்வப்­னா­வின் குற்­றச்­சாட்­டைத் தொடர்ந்து முதல்­வர் பின­ராயி விஜ­யன் பதவி வில­க­வேண்­டும் என்று கோரி எதிர்க்­கட்­சி­கள் போராட்­டம் நடத்­தின.

இதற்­கி­டையே ஸ்வப்னா மீது கேரள முன்­னாள்­அ­மைச்­சர் ஜலீல் அவ­தூறு வழக்கு ஒன்­றைத் தொடர்ந்­தார். இதில் தன்­னைக் கைது­செய்­யா­மல் இருக்க முன்­ஜா­மீன் கேட்டு நீதி­மன்­றத்­தில் ஸ்வப்னா தாக்­கல் செய்த மனு நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­தது. ஸ்வப்னா மீது பிணை­யில் வெளி­வ­ரத்­தக்க வழக்கே பதிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறிய நீதி­மன்­றம் அவ­ரது மனு­வைத் தள்­ளு­படி செய்­தது.

இதன் பிறகு ஸ்வப்னா மற்­றொரு பர­ப­ரப்­பான தக­வலை வெளி­யிட்­டார். அதில் முதல்­வர் பினராயி விஜ­ய­னுக்கு நெருக்­க­மான ஷாஜ் கிரண் என்­ப­வர் தன்­னைச் சந்­தித்து பேசி­ய­தா­க­வும் அப்­போது நீதி­மன்­றத்­தில் அளித்த ரக­சிய வாக்­கு­மூ­லத்தை திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளும்­படி அவர் தன்னை வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் ஸ்வப்னா கூறி­னார்.

இவ்­வாறு செய்­தால் தன்­மீ­தான வழக்­கு­கள் அனைத்­தை­யும் தள்­ளு­படி செய்ய ஏற்­பாடு செய்­வ­தா­க­வும் ‌ஷாஜ் கிரண் குறிப்­பிட்­ட­தாக ஸ்வப்னா சொன்­னார்.

இது­தொ­டர்­பான ஒலிப்­ப­திவு தன்­னி­டம் இருப்­ப­தா­கக் கூறிய அவர் அதனை வெளி­யி­டப்­போ­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார். இத­னால் கேர­ளா­வில் மீண்­டும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

ஈராண்­டுக்கு முன்­னர் திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யம் வழி­யா­கக் கடத்­தப்­ப­ட­வி­ருந்த 14.82 கோடி ரூபாய் மதிப்­புள்ள தங்­கத்தை மத்­திய சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இதன் தொடர்­பில் முதல்­வ­ரின் முன்­னாள் முதன்­மைச் செய­லா­ளர் சிவ­சங்­கர், ஸ்வப்னா சுரேஷ் போன்­றோர் கைது ­செய்­யப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!