என் ஆசை மச்சான் எலி பிடிப்பதில் புலி

சனிக்கிழமை

ஒரு சாமானியர்

வாய்க்கால் இருக்கு, தண்ணீர் இருக்கு, வயல் இருக்கு, பயிர் இருக்கு, வரப்பு இருக்கு, பொந்து இருக்கு, எலி இருக்கு; எங்களுக்குக் கூலியும் இருக்கு என்கிறார்கள் இத்தம்பதியர். இவர்கள் துளி பிசகாமல் எலி பிடிப்பதில் வல்லவர்கள்.

சிலர் வீடு­களில் எலி தொல்­லையை அனு­ப­வித்து இருப்­பார்­கள். வீட்டில் பொருட்­க­ளைச் சேதப்­ப­டுத்தி ரகளை செய்­யும் எலி­கள், வேக­மாக ஓடி­வந்து மோதும்­போது காலி­யான கொக்கோ கோலா டப்­பி­கள்­கூட நசுங்­கி­வி­டும்.

ஆனால் நெல் விளை­யும் வயல்­களில் வசிக்­கும் எலி­கள் இப்­படி அல்ல. இருக்­கும் இடமே தெரியாமல் முத­லுக்கே மோசம் வைத்­து­வி­டும்.

எலி­ என்றால் விவ­சா­யி­க­ளுக்கு கிலி (பயம்) என்று சொல்லப்படுகிறது.

தமிழ்­நாட்­டில் வண்­டல் மண் வட்­டா­ர­மான டெல்டா மாவட்­டங்­களில் முப்­போ­கம் நெல் பயி­ரி­டப்­படு­கிறது. பயிர் முளைக்­கத் தொடங்­கி­யது முதல் அறு­வடை வரை எலி தொல்லை பெருந் தொல்லை­ என்பதை விவசாயி களைக் கேட்டால் சொல்வார்கள்.

பத்து மா நிலத்­தில் (ஒரு மா என்­பது 100 குழி, ஒரு குழி என்பது 144 சதுர அடி) எலி­களை ஒழிக்க ரூ.10,000 செலவு செய்ய வேண்டி இருக்­கிறது என்­கி­றார் ஒன்றரை வேலி (ஒரு வேலி 20 மா) நிலத்தில் பயிர் செய்யும் திரு சுந்­த­ரம், 65, என்­கிற ஓய்வு பெற்ற வங்­கித் துறை ஊழி­யர்.

இது 10 மூட்டை நெல் விளைச்­ச­லுக்­குச் சமம் என்­றார் அவர்.

வய­லில் எலி­களை அழிப்­ப­தற்­காக இவர் வேடர்­களைக் கூலிக்கு அமர்த்­து­கிறார். இந்த வேடுவர்­கள், இந்த விவ­சா­யி­யின் சொந்த ஊரான ஆனந்­தக்­குடி என்ற கிரா­மத்­தில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலை­வில் இருக்­கும் காட்­டு­மன்­னார்­குடி பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள்.

இந்­தப் பரு­வத்­தில் குடும்­பத்­தோடு டெல்டா பகு­திக்கு வந்து தங்கி வயல்­களில் கூலிக்கு எலி பிடிக்­கி­றார்­கள். இப்­படி தன் மனை­வி­யு­டன் வந்த ஒரு­வர்­தான் சேகர் என்­கின்ற கல்­யா­ண­சுந்­த­ரம், 40.

நான் ஆனந்­தக்­குடி சென்று வயலில் சேகர் எலி பிடித்ததை 30 நிமி­டங்­கள் அங்­கி­ருந்­து பார்த்தேன்.

"வயல் வரப்­பில்­ பொந்து வைத்து எலி­கள் வாழும். இர­வில்­பொந்­தை­விட்டு வெளி­யே­வந்து பயிரை மேயும். பக­லில் பொந்­துக்­குள் போய்­வி­டும். எலியை விரட்­டிக்­கொண்டு பாம்­பும் பொந்­துக்­குள் புகுந்­து­விடு­வ­துண்டு. தலைமுறை தலைமுறையாக எலி பிடிப்பதே எங்கள் தொழில்," என்றார் சேகர்.

ஒரு சின்ன மண் களை­யம் வைத்­தி­ருக்­கி­றார்­கள். அதன் உள்ளே வைக்­கோலைத் திணித்து அதில் நெருப்பு கணந்­து­கொண்டு இருக்­கிறது. களை­யத்­தின் வெளியே சிறி­தாக ஒரு ஓட்டை உள்­ளது. வரப்பு ஓர­மாக மண்ணை வெளியே தள்ளி எலி­கள் பொந்து அமைத்து இருக்­கும்.

அந்த இடங்­க­ளைப் பார்த்து அந்­தப் பொந்­தில் களை­யத்தை வைத்து சுற்­றி­லும் இலே­சாக மண்ணை அணைத்து, களை­யத்­தில் இருக்­கும் ஓட்டை வழி­யாக சேகர் ஊதி­னார். களை­யத்­தில் இருந்து சுமார் ஒரு மீட்­டர் தொலை வுக்குப் புகை உள்ளே சென்று வெளியேறியது.

புகை வந்த இடங்­க­ளைப் பார்த்­துக்­கொண்டே போன சேகர், கடை­சி­யில் ஒரு திறப்பு இருந்­த­தைக் கண்­டார். அப்­படி இருந்­தால் அந்தப் பொந்­தில் எலி இருக்­காது என்று அந்த இடத்­தை­விட்டு நகர்ந்து அடுத்த பொந்தை சீர்­செய்து அதில் களை­யத்­தை­ வைத்து ஊதி­னார்.

புகை பொந்­துக்­குள் சென்­றது. பொந்து எங்­கெங்கு போகி­றதோ அங்­கெல்­லாம் புகை புகுந்தது.

பொந்­தில் ஓய்வெடுத்தபடி இருந்த எலி புகை­யைச் சுவா­சித்து மயக்கம் அடைந்­து­வி­ட்டது. பிறகு களை­யத்தை வெளியே எடுத்து பொந்தை வெட்டி எலி­யைப் பிடித்து­ வெளியே எடுத்தார் சேகர்.

தான் பிடித்த எலியை வாய்க்­கா­லின் எதிர்க்­கரை­யில் நின்­றி­ருந்த தன் மனை­வி­யிடம் அவர் தூக்கிப் போட்­டார். தன் பெயரைச் சொல்ல விரும்பாத அந்தப் பெண்மணி புன்னகையுடன் அதை சாக்கு மூட்டைக்குள் போட்டுக் கட்டினார்.

இவ்வேளையில் குறுக்கிட்ட வயல் உரி­மை­யா­ளர் திரு சுந்­த­ரம், வேடர்­கள் 10 மா நிலத்தில் எலி­களைப் பிடிக்க சுமார் நான்கு, ஐந்து நாள்­களை எடுத்­துக்கொள்­வார்­கள்.

ஒரு எலி­யைப் பிடித்­தால் ரூ.30 கூலி. ஒரு நாளைக்கு 100 எலி­களைக் கூட பிடிப்­பார்­கள். அப்­படி எனில் ரூ.3,000 கூலி கொடுக்க வேண்­டும் என்றார்.

எலியைப் பிடித்து அவற்றைக் கொல்வதைப் பார்த்தபோது பரிதாப மாக இருந்தது. மனம் கவலை அடைந்தது. இருந்தாலும் ஒன்றின் அழிவைச் சார்ந்து மற்றொன்றின் வாழ்வு இருக்கிறது என்ற உலக நியதியை நினைத்தபடியே அந்த வயலை விட்டு அகன்றேன்.

அகன்றபோது, சேகர் துக்கிப் போட்ட எலியை அவரின் மனைவி புன்னகையுடன் பிடித்த காட்சி என் மனதில் நிழலாடியது.

அந்தப் புன்னகை, 'என் மச்சான் எலி­யைப் பிடிப்­ப­தில் புலி' என்று அந்த மாது தன் மனதுக்குள் பெருமைபட சொல்லிக்கொண்ட தாகவே எனக்குப் புரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!