நடுவானில் விமானத்துக்குள் மூண்ட புகையால் பரபரப்பு

புது­டெல்லி: பறக்­கத் தொடங்­கிய சிறிது நேரத்­தில் விமா­னத்­துக்­குள் திடீ­ரென புகை பர­வத் தொடங்­கி­ய­தால் பய­ணி­கள் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இதை­ய­டுத்து அந்த விமா­னம் டெல்லி விமான நிலை­யத்­தில் மீண்­டும் பாது­காப்­பாக தரை­யிறங்­கி­யது.

ஸ்பைஸ்­ஜெட் நிறு­வன விமா­னம் ஒன்று நேற்று காலை டெல்­லி­யில் இருந்து ஜபல்­பூ­ருக்­குப் புறப்­பட்­டது. சில நிமி­டங்­களில் அந்த விமா­னம் சுமார் ஐந்­தா­யி­ரம் அடி உய­ரத்தை எட்­டி­ய­போது, விமா­னி­க­ளின் காக்­பிட் பகு­திக்குப் பின்னே உள்ள விமா­னத்­தின் உள்­ப­கு­தி­யில் திடீ­ரென புகை மூட்­டம் ஏற்­பட்­டது.

அடர்ந்த புகை­யைக் கண்டு பய­ணி­களும் விமான பணி­யா­ளர்­களும் கடும் அதிர்ச்­சிக்கு ஆளா­கி­னர்.

இதை­ய­டுத்து விமா­னி­கள் டெல்லி விமான நிலை­யத்­துக்கு தக­வல் தெரி­வித்­த­னர். அடுத்த சில நிமி­டங்­களில் அந்த விமா­னம் டெல்லி விமான நிலை­யத்­தில் மீண்­டும் பாது­காப்­பாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

விமா­னத்­தில் திடீ­ரென புகை மூண்­ட­தற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

இந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக ஸ்பைஸ்­ஜெட் நிறு­வ­னத்­தின் செய்தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

விமா­னத்­தில் புகை மூண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து டெல்லி விமான நிலை­யத்­தில் பர­ப­ரப்பு நில­வி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!