சம்பல் பள்ளத்தாக்கு: மீண்டும் முளைக்கும் கொள்ளையர்கள்

போபால்: சம்­பல் பள்­ளத்­தாக்­கில் மீண்­டும் கொள்­ளைக்­கா­ரர்­கள் தலை­தூக்கி உள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மத்­தி­யப்­பி­ர­தே­சத்­தில் உள்ள கிரா­மப் பகு­தி­யில் சாலை­கள் அமைக்­கும் ஒப்­பந்­த­தா­ர­ரி­டம் ஒரு கொள்­ளைக் கும்­பல் பணம் கேட்டு மிரட்­டல் விடுத்­துள்­ளது.

மத்­தி­யப்­பி­ர­தே­சம், உத்­த­ரப்­பி­ர­தே­சம், ராஜஸ்­தான் என மூன்று மாநி­லங்­களில் பர­வி­யுள்­ளது சம்­பல் பள்­ளத்­தாக்கு.

சுமார் 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்­தப் பள்­ளத்­தாக்கு கொள்­ளைக்­கா­ரர்­க­ளின் பிடி­யில் சிக்­கி­யி­ருந்­தது. எனி­னும் இப்­பகு­தி­யில் கோலோச்­சிய பூலான் தேவி சரண் அடைந்­த­தும் கொள்ளையர்­களின் ஆதிக்­கம் குறைந்­தது. பல கொள்­ளை­யர்­கள் காவல்துறையால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­னர். நாளடை­வில் அங்கு இயல்புநிலை திரும்­பி­யது.

இந்­நி­லை­யில், மத்­தி­யப் பிர­தே­சத்­தில் கேசவ் குஜ்­ஜர் என்ற கொள்­ளை­யன் தலை­மை­யில் பல்­வேறு கொள்­ளைச் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளதை அடுத்து அவ­னது தலைக்கு அம்­மா­நில காவல்­துறை ஒரு லட்­சம் ரூபாய் பரிசு அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சம்­பல் பள்­ளத்­தாக்­குக்கு உட்­பட்ட பகு­தி­யில் எழு பேர் கொண்ட கொள்­ளை­யர்­கள் கும்­பல் ஒன்று சாலை ஒப்­பந்­த­தா­ர­ரி­டம் பகி­ரங்­க­மாக பணம் கேட்டு மிரட்­டல் விடுத்­துள்­ளது.

இதையடுத்து அந்தப் பகுதியில் மீண்டும் காவல்துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!