164 வாக்குகளைப் பெற்று ராகுல் நர்வேகர் வெற்றி

மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு

மும்பை: மகா­ராஷ்­டிரா சட்­டப்­

பே­ரவை சபா­நா­ய­க­ராக பாஜ­க­வைச் சேர்ந்த ராகுல் நர்­வே­கர் வெற்றி பெற்­றுள்­ளார்.

288 உறுப்­பி­னர்­களைக் கொண்ட மகா­ராஷ்டிரா சட்­டப்­பே­ர­வை­யில் 164 வாக்­கு­க­ளைப் பெற்று மகா­ராஷ்டிரா சபா­நா­ய­க­ராக ராகுல் நார்­வே­கர் தேர்வு செய்­யப்­பட்­டு

உள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கடந்த இரண்டறை ஆண்­டு­க­ளாக செயல்­பட்டு வந்த சிவ­சேனா தலை­மை­யி­லான தேசி­ய­வாத காங்­கி­ரஸ், காங்­கி­ரஸ் கூட்­டணி அரசு, சிவ­சேனா அதி­ருப்தி எம்.எல்.ஏ.க்க­ளால் கவிழ்ந்­தது.

கடந்த புதன்­கி­ழமை உத்­தவ் தாக்­கரே முதல்­வர் பத­வியை ராஜி­னாமா செய்­தார். அத­னைத்­

தொ­டர்ந்து மறு­நாளே புதிய அரசு அமைந்­தது.

சிவ­சேனா அதி­ருப்தி அணி தலை­வர் ஏக்­நாத் ஷிண்டே முத­ல­மைச்­சர் பதவி ஏற்­றார். பாஜக­வைச் சேர்ந்த முன்­னாள் முதல்­வர் தேவேந்­திர பட்­னா­விஸ் துணை முத­லமைச்­சர் ஆனார். இதன்­படி பாஜக ஆத­ர­வு­டன் சிவ­சேனா அதி­ருப்தி அணி ஆட்சி அமைத்திருக்கிறது.

புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த பதினைந்து மாதமாக சபாநாயகர் பதவியில் எவரும் இல்லாததால் அதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க கோரி ஏக்நாத் ஷிண்டே அரசு இரண்டு நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் ஒன்றை நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று சபா­நா­ய­கர் தேர்­தல் நடை­பெற்­றது. இந்­தத் தேர்­த­லில் பாஜக சார்­பில் மும்பை கொலபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்­வேக்­கர் வேட்பு மனு தாக்­கல் செய்­தார்.

இது­நாள் வரை ஆளும் கட்­சி ­க­ளாக இருந்த சிவ­சேனா, தேசி­ய­வாத காங்­கி­ரஸ், காங்­கி­ரஸ் கட்­சி­கள் தரப்­பும் திடீ­ரென பொது வேட்­பா­ளரை அறி­வித்­தது.

இந்­நி­லை­யில் பர­ப­ரப்­பான அர­சி­யல் சூழ்­நி­லை­யில் நேற்று கூடிய மகா­ராஷ்­டிரா சட்­ட­ச­பை­யில் புதிய சபா­நா­ய­க­ராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்­யப்­பட்­டார்.

பாஜக வேட்­பா­ளர் ராகுல்

நர்­வே­க­ருக்கு ஆத­ர­வாக 164

வாக்­கு­களும் எதி­ராக 107

வாக்­கு­களும் பதி­வா­கின.

இத­னைத்­தொ­டர்ந்து கோஷங்­

க­ளுக்கு மத்­தி­யில் மகா­ராஷ்­டிரா சட்­ட­ச­பை­யின் சபா­நா­ய­க­ராக பாஜக எம்­எல்ஏ ராகுல் நர்­வேக்­கர் பொறுப்­பேற்­றுக் கொண்­டார்.

இந்நிலையில் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் சட்ட சபையில் பேசும்போது, “நான் எந்தவொரு எம்எல்ஏ.வையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. அவர்களாக என்னிடம் வந்தனர். நாங்கள் பாலசாகிப் தாக்கரேயின் கனவை நிறைவேற்றுவோம். எல்லாரும் பட்னாவிஸ்தான் முதல்வர் ஆவார் என நினைத்தனர். நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை. விதியாக தானாக எனக்கு வந்துள்ளது.

“பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. பாஜக எனக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்தது. இந்தக் கட்சி ஜனநாயகத்தை மதிக்கிற கட்சி. இப்போது பதவி ஏற்றிருக்கிற ஆட்சி தாக்கரேயின் அரசாக இருக்கும்,” என்று பேசினார்.

மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனாவின் அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே. (நடுவில்)

மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!