காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரில் பயங்­கர ஆயு­தங்­க­ளு­டன் பிடி­பட்ட இரண்டு தீவி­ர­வா­தி­களில் ஒரு­வர் பாஜக நிர்­வாகி என்­பது தெரிய வந்­துள்­ளது. இத­னால் கட்சி வட்­டா­ரங்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ளன.

அங்கு ரியாசி மாவட்­டத்­தில் உள்ள கிரா­மத்­தில் இரண்டு தீவி­ர­வா­தி­களும் பதுங்கி இருந்­த­போது, கிராம மக்­க­ளுக்கு அவர்­க­ளைப் பற்­றிய விவ­ரம் தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து, கிராம மக்­கள் துணிச்­ச­லு­டன் அவர்­க­ளைச் சுற்றி வளைத்­துப் பிடித்­த­னர். பின்­னர் இரு­வ­ரும் காவல்­து­றை­யி­டம் ஒப்­படைக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கிராம மக்­கள் பிடித்து கொடுத்த தீவி­ர­வா­தி­களில் ஒரு­வ­ரான தலிப் உசேன் ஷா, பாஜ­க­வின் தொழில்­நுட்­பப் பிரி­வின் நிர்­வாகி என்­பது தெரிய வந்­துள்­ளது. கடந்த மே மாதம் அவர் பாஜக நிர்­வா­கி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

தலிப் உசேன் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்­த­வர் என்­ப­தும் லஷ்­கர்-இ-தொய்பா அமைப்­பின் முக்­கிய உறுப்­பி­னர் என்­ப­தும் விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

அண்­மை­யில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்­பில் தலிப் உசேனுக்கு தொடர்பு உள்­ளதை பாது­காப்­புப் படை­யின் உறுதி செய்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

இந்த கைது நட­வ­டிக்கை குறித்து கருத்து தெரி­வித்த பாஜக செய்­தித் தொடர்­பா­ளர் பத்­தா­னியா, பாஜ­க­வைப் பயன்­ப­டுத்தி தீவி­ர­வா­தி­கள் சில சதிச்­செ­யல்­களை அரங்­கேற்­றத் திட்­ட­மி­டு­வ­தாக கூறி­னார். ஜம்மு பகுதி சமூக ஊட­கப் பிரி­வுத் தலை­வ­ராக தலிப் உசேன் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, பாஜ­க­வில் தற்­போது இணை­யம் வழி உறுப்­பி­னர் சேர்க்கை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அத­னால் சில குள­று­ப­டி­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"இணை­யம் வழி உறுப்­பினர்­களா­கச் சேர்ந்து கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கம் வரை சென்று தீவி­ர­வா­தி­கள் உளவு பார்க்­கின்­ற­னர். அதன் பின்­னர், கட்சி தலை­வர்­க­ளையே கொல்ல சதித் திட்­டம் தீட்­டு­கி­றார்­கள். இது தீவி­ர­வா­தி­க­ளின் புதிய பாணி," என்­றார் பத்­தா­னியா.

இதற்­கி­டையே, தீவி­ர­வா­தி­களைப் பிடித்­துக் கொடுத்த கிராம மக்­க­ளின் துணிச்­ச­லைப் பாராட்டி காவல்­துறை சார்­பில் இரண்டு லட்­சம் ரூபாய் பரிசு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!