குற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை: நீதிமன்றம் அறிவுறுத்து

லக்னோ: நாடா­ளு­மன்­றம், சட்­ட­மன்­றங்­க­ளுக்­குத் தேர்­வா­கும் குற்­றப் பின்­னணி உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக அல­கா­பாத் உயர் நீதி­மன்­றம் கவலை தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து, குற்­ற­வா­ளி­கள் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தைத் தடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என தேர்­தல் ஆணை­யத்­துக்கு அந்­நீ­தி­மன்­றம் அறி­வு­றுத்தி உள்­ளது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வ­ரது பிணை மனு மீதான விசா­ர­ணை­யின்­போது, கடந்த 2004ஆம் ஆண்டு குற்ற வழக்­கு­கள் உள்ள நாடா­ளு­மன்ற மக்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 24 விழுக்­கா­டாக இருந்­தது என்று நீதி­பதி தினேஷ் குமார் சிங் குறிப்­பிட்­டார்.

அதன் பின்­னர், இந்த எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து, கடந்து 2019ஆம் ஆண்டு மக்­க­ள­வைக்கு தேர்­வான எம்­பிக்­களில் 43 விழுக்­காட்­டி­னர் மீது குற்ற வழக்­கு­கள் நிலு­வை­யில் இருப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

எனவே, குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் அர­சி­யல்­வா­தி­கள், அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யே­யான புனி­த­மற்ற தொடர்­பைத் துண்­டிக்க வேண்­டும் என்­றார் நீதி­பதி.

"அர­சி­ய­லில் இருந்து குற்­ற­வா­ளி­களை நீக்க தேவை­யான நட­வ­டிக்­கையை தேர்­தல் ஆணை­ய­மும் நாடா­ளு­மன்­ற­மும் மேற்­கொள்­ள­வேண்­டும். நாடா­ளு­மன்­றத்­திற்­கும் சட்­ட­மன்­றத்­திற்­கும் செல்­லும் குற்­ற­வா­ளி­கள் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பது நம் அனை­வ­ருக்­கு­மான எச்­ச­ரிக்கை மணி," என்­றார் நீதி­பதி தினேஷ் குமார் சிங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!