கேரளா: 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வி­லும் தென்­மேற்கு பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. அங்கு ஆறு மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

காசர்­கோடு, இடுக்கி, திருச்­சூர், மலப்­பு­ரம், கோழிக்­கோடு,கண்­ணூர் மாவட்­டங்­களில் இடி­யு­டன் கூடிய மழை பெய்­யும் என்­றும் அடுத்த இரு தினங்­க­ளுக்கு மழை நீடிக்­கும் என்­றும் வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­தது.

கேர­ளா­வின் மலை­யோர மாவட்­டங்­களில் கடந்த இரு வாரங்­க­ளாக கன­மழை பெய்து வரு­வ­தால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது. பெரும்­பா­லோர் வீடு­களில் முடங்கி உள்­ள­னர்.

ஆறு முதல் இரு­பது சென்டி மீட்­டர் வரை மழைப்­பொ­ழிவு இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டால் ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும்.

இதற்­கி­டையே, லட்­சத்­தீவு முதல் கர்­நா­ட­கா­வின் கரை­யோ­ரப் பகு­தி­க­ளி­லும் நாளை இரவு வரை பலத்த சூறைக்­காற்று வீசும் என வானிலை மையம் தெரி­வித்து உள்­ளது.

மணிக்கு 60 கிலோ மீட்­டர் வேகத்­தில் சூறைக்­காற்று வீச வாய்ப்­புள்­ள­தால் மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்ல வேண்­டாம் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இடுக்கி மாவட்­டத்­தில் ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் 50 வயது மதிக்­கத்­தக்க பெண் ஒரு­வர் மண்­ணுக்­குள் புதைந்து உயி­ரி­ழந்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!