கேரளா, மும்பையில் நீடிக்கும் மழையால் மக்கள் பாதிப்பு

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் பரு­வ­மழை தொடர்ந்து பெய்து வரு­வதை அடுத்து, அம்­மா­நி­லத்­தில் உள்ள எட்டு மாவட்­டங்­க­ளுக்கு கன­மழைக்­கான மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எர்­ணா­கு­ளம், இடுக்கி, திரி­சூர், மலப்­பு­ரம், கோழிக்­கோடு, வய­நாடு, கண்­ணூர், காசர்­கோடு ஆகிய எட்டு மாவட்ட மக்­களும் அவ­சி­யம் இன்றி வீடு­களை விட்டு வெளியே செல்ல வேண்­டாம் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அடுத்த இரு தினங்­க­ளுக்கு மாநி­லம் முழு­வ­தும் பலத்த மழை பெய்­யும் என்­றும் குறிப்­பிட்ட சில இடங்­களில் இடி, மின்­ன­லு­டன் கூடிய மழை பெய்­யும் என்­றும் வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

குஜ­ராத், மகா­ராஷ்­டிர கரை­யோ­ரப் பகு­தி­யில் உரு­வாகி உள்ள காற்­ற­ழுத்த தாழ்­வுப்­ப­கு­தி­யும் வங்­கக்­க­ட­லில் உரு­வாகி உள்ள புயல் சின்­ன­மும் மழைப்­பொ­ழிவு அதி­க­ரிக்க கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, மீன­வர்­கள் வரும் 9ஆம் தேதி வரை மீன்­பி­டிக்­கச் செல்ல வேண்­டாம் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கேரள கரை­யோ­ரப் பகு­தி­களில் அதி­க­பட்­ச­மாக நான்கு மீட்­டர் உய­ரத்­துக்கு ராட்­சத அலை­கள் எழக்­கூடும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மும்­பை­யில் கடந்த மூன்று தினங்­க­ளாக நீடித்து வரும் மழை­யில் அம்­மா­ந­க­ரம் வெள்­ளத்­தில் மிதக்­கிறது. வெள்­ளிக்­கிழமை வரை கன­மழை பெய்­யும் என கணிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தேசிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. மும்பை மாந­க­ராட்சி சார்­பில் பல்­வேறு முன்­னேற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் பேரி­டர் மேலாண்­மைப் படை தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ராய்­கட், ரத்­ன­கிரி உள்­ளிட்ட சில மாவட்­டங்­க­ளுக்கு மட்­டும் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மும்பை சான்டா குரூஸ் பகுதி­யில் 193.6 மில்லி மீட்­டர் மழை பதி­வாகி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!