பஞ்சாப் முதல்வருக்கு 2வது திருமணம்; மருத்துவரை மணந்தார் பகவந்த் மான்

சண்­டி­கர்: அண்­மை­யில் பஞ்­சாப் முதல்­வ­ராக பொறுப்பு ஏற்ற பக­வந்த் மான் நேற்று நடை­பெற்ற தனிப்­பட்ட இல்­லத் திரு­மண நிகழ்ச்­சி­யில் மருத்­து­வ­ரான குர்­பி­ரீத் கவு­ரின் கரத்­தைப் பற்­றி­யி­ருக்­கி­றார்.

திரு­ம­ணத்­திற்கு சில மணி நேரத்­துக்கு முன்பு டுவிட்­டர் பதிவு ஒன்றை வெளி­யிட்ட மண­ம­கள், நல்ல நாள் வந்­து­விட்­ட­தாக தெரி­வித்­தார். 'மண்­ணின் மகள்' என்­று மருத்துவ­ரான அவர் தம்மை குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நடி­க­ராக இருந்து அர­சி­ய­லில் குதித்து கெஜ்­ரி­வா­லின் ஆம் ஆத்மி கட்­சி­யில் சேர்ந்து தற்­போது பஞ்­சாப் மாநி­லத்­தின் முதல்­வ­ராக உயர்ந்­துள்ள 48 வயது பக­வந்த் மானுக்கு இது இரண்­டா­வது திரு ­ம­ணம்.

இவர், ஏற்­க­னவே இந்­தர்­பி­ரீத் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். முதல் மனைவி மூலம் இவருக்கு சீரத், தில்­ஷன் என்ற பெய­ரில் இரண்டு பிள்ளைகள் இருக்­கின்­ற­னர். தற்­போது அவ­ரது முதல் மனைவி இந்­தர்­பி­ரீத் கவுர் தனது இரண்டு பிள்ளை­க­ளு­டன் அமெ­ரிக்­கா­வில் வசித்து வரு­கி­றார்.

இந்த நிலை­யில் பக­வந்த் மானுக்கு 2வது திரு­ம­ணத்­துக்கு அவ­ரது தாயார் ஹர்­பால் கவு­ரும் சகோ­தரி மான்­பி­ரீத் கவு­ரும் ஏற்­பாடு செய்­த­னர்.

சண்­டி­க­ரில் நேற்று நடந்த தனிப்­பட்ட திரு­மண நிகழ்ச்­சி­யில் குர்­பி­ரீத் கவுரை பக­வந்த் மான் மணந்து கொண்­டார். நெருங்­கிய உற­வி­னர்­கள் மட்­டுமே இந்­நி­கழ்ச்­சி­யில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர். மணவிழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியோ ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!