புதிய வகை கொரோனா

புது­டெல்லி: இந்­தியா உள்­ளிட்ட சில நாடு­களில் ஓமிக்­ரா­னின் புதிய வகை கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இது குறித்து விளக்­கம் அளித்த உலக சுகா­தார நிறு­வ­னத் ­தின் தலை­மைச் செய­லா­ளர் டெட்­ரோஸ் அதா­னம், இந்­தியா உட்­பட சில நாடு­களில் ஏபி.2.75 என்­கிற புதிய துணை வகை கிருமி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்­றார்.

"நாம் இன்­னும் தொற்­று­நோய்க்கு மத்­தி­யில் இருக்­கி­றோம். கிரு­மிக்கு ஆற்றல் அதிகமுள்ளது. எனவே அது பிஏ.4 அல்­லது பிஏ.5 அல்­லது பிஏ.2.75ஆக இருந்­தா­லும் கிரு­மி­யின் தாக்­கம் தொட­ரும். அத­னால் மக்­களும் சமூ­கங்­களும் தொடர்ந்து முகக்­க­வ­சம் அணிய வேண்­டும். கூட்­டத்­தைத் தவிர்க்க வேண்­டும். மக்­கள் பாது­காப்பு உறுதி செய்யப் பட வேண்­டும்," என்று அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"உல­க­ள­வில் கொவிட்-19 தொற்று கடந்த இரண்டு வாரங்­களில் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

"ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் பிஏ.4 மற்­றும் பிஏ.5 அலை­கள் எழுந்­துள்­ளன," என்று அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நிை­ல­யில் இந்­தி­யா­வில் தொற்று மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 16,159 பேர் பாதிக்­கப்பட்­ட­னர். நேற்று 18,930 பேருக்கு தொற்று இருப்­பது உறுதி செய்­யப் பட்­டது என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இதன் மூலம் மொத்த கிரு­மித் தொற்று பாதிப்பு எண்­ணிக்கை 43,566,739 ஆக கூடி­யுள்­ளது. அதே­போல் தொற்று பாதிப்­பு­க­ளுக்கு ஒரே நாளில் 35 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தற்­கான கால இடை­வெ­ளியை 9 மாதங்­களில் இருந்து 6 மாத­மாக குறைப்­ப­தாக இந்திய சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

கொவிட் தடுப்­பூசி 2வது முறை போட்ட பிறகு 9 மாதங்­கள் அல்லது 39 வாரங்­க­ளுக்குப் பிறகு பூஸ்­டர் ஊசி போடப்­ப­டு­கிறது.

அறி­வி­யல் ஆதா­ரங்­கள் மற்­றும் உலக நாடு­க­ளின் அடிப்­ப­டை­யில் இதனை 6 மாதங்­கள் அல்­லது 26 வாரங்­க­ளாக குறைக்க வேண்­டும் என்ற துணைக்­குழு அளித்த பரிந்­து­ரையை நோய் தடுப்­புக்­கான தேசிய தொழில்­நுட்பக் குழு ஏற்றுக் கொண்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் ராஜேஷ் பூஷண் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி 2வது தடுப்­பூசி ேபாட்ட 18 முதல் 59 வய­து­டைய அனை­வ­ரும் தனி­யார் தடுப்­பூசி நிலை­யங்­களில் 6 மாதங்­க­ளுக்கு பிறகு பூஸ்­டர் தடுப்­பூசி போட்டுக் கொள்­ள­லாம்.

அறு­பது வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள், முன்­கள ஊழி­யர்­கள் உள்­ளிட்­டோர் அரசு மருத்­துவமனை ­களில் இல­வ­ச­மாக பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­லாம் என்று அறிக்கை மேலும் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!