ஊட்டச்சத்து: இந்தியா சாதனை

ஐநா: சத்து குறைபாடுள்ள சிறார் அளவு 10 ஆண்டுகளில் 10% குறைவு

புது­டெல்லி: இந்­தியா ஊட்­டச்­சத்து குறை­பாட்டை பெரி­த­ளவு குறைத்து சாதனை படைத்து இருப்­ப­தாக ஐநா நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

ஊட்­டச்­சத்து கிடைக்­கா­மல் உள்ள ஐந்து வய­துக்­கும் குறை­வான சிறார்­ அளவு 10% (48% லிருந்து 38% ஆக) குறைந்து இருக்­கிறது என்று அந்த அமைப்பு அண்­மை­யில் தெரி­வித்­தது.

கடந்த 2006ஆம் ஆண்­டுக்­கும் 2016ஆம் ஆண்­டுக்­கும் இடை­யில் இது சாதிக்­கப்­பட்டு இருப்­ப­தா­கவும் அது கூறி­யது.

அர­சாங்­கம் தன் மக்­க­ளுக்குப் போதிய உணவு கிடைப்­பதைப் பெரு­ம­ள­வில் உறு­திப்­ப­டுத்தி வரு­கிறது. ஏழ்­மையை ஒழிக்­கும் பல்­வேறு செயல்­திட்­டங்­களை அமல்­படுத்தி வரு­கிறது.

நாட்­டில் 1950-51ல் உணவு தானிய உற்­பத்தி 50 மில்­லி­யன் டன்­னாக இருந்­தது. இது 2014-15ல் கிட்­டத்­தட்ட 250 மில்­லி­யன் டன்­னாக அதி­க­ரித்துள்ளது.

இந்­தியா இப்­போது உண­வுப்­பொ­ருள்­களை ஏற்­று­மதி செய்­யும் நாடாக இருக்­கிறது.

ஆகை­யால், உண­வுப்­பொ­ருள்­களைப் பொறுத்­த­வரை உதவி தேவைப்­படும் ஒரு நாடாக இந்­தியா இப்­போது இல்லை.

அர­சாங்­கம் விவ­சா­யி­க­ளின் வரு­வாயை 2022ஆம் ஆண்டு வாக்­கில் இரண்டு மடங்­காக்­கும் திட்­டத்தை 2016ல் தொடங்­கி­யது.

இது பெரும் பல­ன­ளித்து இருப்­ப­தாக ஐநா குறிப்­பிட்டு இருக்­கிறது.

அர­சு மேற்­கொண்ட பல்­வேறு திட்­டங்­க­ளின் கார­ண­மாக நாட்­டின் மொத்த விளைநிலப்­ப­ரப்பு 90 மில்லி­யன் ஹெக்­ட­ரில் இருந்து 2017ல் 103 மில்­லி­யன் ஹெக்­ட­ரா­கக் கூடி உள்ளதாகவும் அது குறிப்­பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!